இது ஃபேமிலி டைம்: குடும்பத்துடன் கோவா சென்ற தல அஜித்!

 

இது ஃபேமிலி டைம்: குடும்பத்துடன் கோவா சென்ற தல அஜித்!

‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கை முடித்த தல அஜித் தனது குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.

சென்னை: ‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கை முடித்த தல அஜித் தனது குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக அஜித்-சிவா கூட்டணியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தக்ஷா டீம் மாணவர்களுடன் சேர்ந்து இந்தியாவில் முதன் முறையாக ஏர் டாக்ஸி சோதனையில் ஈடுபட்டு பயிற்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து தனது குடும்பத்துக்கு நேர ஒதுக்கியுள்ள தல அஜித், மனைவி, மகள், மகனுடன் கோவாவுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் தல அஜித் தனது குடும்பத்துடன் செல்லும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவா சுற்றுலாவுக்கு பின் தல அஜித், நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ‘தீரன்’ பட இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘தல 59’ படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.