இதுவே கடைசி; இனி நடிக்க மாட்டேன்: அரசியலில் கவனம் செலுத்தும் கமல்ஹாசன்!

 

இதுவே கடைசி; இனி நடிக்க மாட்டேன்: அரசியலில் கவனம் செலுத்தும் கமல்ஹாசன்!

‘இந்தியன் 2’ தான் தனது கடைசி திரைப்படம் என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘இந்தியன் 2’ தான் தனது கடைசி திரைப்படம் என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

indian2

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்து வரும் டிச.14ம் தேதி முதல் ஷூட்டிங்கை துவக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்றும், அதற்கு பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், 1992ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு சென்று வந்த ‘தேவர்மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க கமல்ஹாசன் கதை எழுதி வருவதாக கூறப்பட்டது.

kamalhaasan

சமீபத்தில் கேரள விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசன், ’இந்தியன் 2’ தான், தான் நடிக்கும் கடைசி திரைப்படம். நடிப்பதை கைவிட்டாலும், தனது தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும், பல சமூக நல பணிகளையும் மேற்கொள்ளும்’ என தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரியர்கள் அனைவரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.