இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான லைசென்ஸ் ரத்து… அப்படியும் திருந்திற மாதிரி தெரியலையே..!?

இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமான லைசென்ஸ் ரத்து… அப்படியும் திருந்திற மாதிரி தெரியலையே..!?

போக்குவரத்து காவல்துறை கண்கொத்திப் பாம்பு மாதிரி எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ராத்திரி நேரங்களில் பெட் கட்டி ரேஸில் ஈடு படும் சம்பவங்களும் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது!

போக்குவரத்து காவல்துறை கண்கொத்திப் பாம்பு மாதிரி எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ராத்திரி நேரங்களில் பெட் கட்டி ரேஸில் ஈடு படும் சம்பவங்களும் விபத்துக்களும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது!
 
இப்படி விதி மீறி செயல் பட்ட வாகன ஓட்டுனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது சென்னை போக்குவரத்து காவல்துறை. இந்த ஆண்டு மே மாதம்வரை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 7 லட்சத்து 88 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கடந்த 5 மாதங்களில் 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்த புள்ளி விபரங்கள் படி இதுவரை 8 கோடியே 65 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்,ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டும் 5 கோடியே 86 லட்சம் ருபாய் வசூலிக்கப்படிருப்பதாக கணக்கு சொல்லியிருக்கிறது போக்குவரத்து காவல்துறை! இது தவிர, 55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமம் இதுவரை ரத்து செய்யப்பட்டிருக்கிறதாம்!

55 ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமம்  ரத்து

இவ்வளவு கடுமையாக நடவடிக்கை எடுத்தும் முழுமையாக இது போன்ற குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டுவர ரொம்பவே போராட வேண்டியதிருக்கு என்று புலம்புகிறார்கள் பொறுப்புள்ள அதிகாரிகள் சிலர்.