இதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்!

 

இதுவரை 1.46 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்!

இதுவரை வருமான வரி கணக்கை 1.46 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்னும் 13 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். 

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில், இதுவரை 1.46 கோடிக்கும் சிறிது அதிகமானவர்கள் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்து வருமான வரித் துறை கூறியதாவது: இதுவரை வருமான வரி கணக்கை 1.46 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 16ம் தேதி மட்டும் 7.94 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.

மொத்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களில் 90.8 லட்சம் பேரின் ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்துக்கும் அதிகம். ஐ.டி.ஆர்.-1 விண்ணப்பத்தை 5.26 லட்சம் பேர் தாக்கல் செய்தனர். ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்கள் மட்டுமே ஐ.டி.ஆர்.-1 விண்ணப்பத்தை தாக்கல் செய்வர்.

ஐ.டி.ஆர்.

9.68 லட்சம் பேர் ஐ.டி.ஆர்.-2 விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர். வர்ததக ஆதாயம், தொழில் வாயிலாக வருவாய் ஈட்டாத தனிநபர்கள், இந்து கூட்டு குடும்பங்கள் ஐ.டி.ஆர்.-2 விண்ணப்பத்தை தாக்கல் செய்வர். ஐ.டி.ஆர்.-3 விண்ணப்பத்தை 14.94 லட்சம் பேர் தாக்கல் செய்தனர். வர்த்தகம் மற்றம் தொழில் வாயிலாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பங்கள் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்வர். 

ஊக வருமான திட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் தொழில் வாயிலாக ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் 28 லட்சம் பேர் ஐ.டி.ஆர்.-1 விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர். 24 ஆயிரம் நிறுவனங்கள் ஐ.டி.ஆர்.-6 விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளன.இவ்வாறு வருமான வரித் துறை தெரிவித்தது.