‘இதுவரை கைலாசாவில் குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்’ : போலீசுக்கு தண்ணி காட்டும் நித்தியானந்தா

 

‘இதுவரை கைலாசாவில் குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்’  : போலீசுக்கு தண்ணி காட்டும் நித்தியானந்தா

கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால்  அதையெல்லாம் கண்டு நித்தி அஞ்சுவதாக இல்லை. 

நித்தியானந்தாவைத் தேடுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.நாளைக்குள்  நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால்  அதையெல்லாம் கண்டு நித்தி அஞ்சுவதாக இல்லை. 

ttn

வழக்கம்போல் நித்தியானந்தா தினசரி உபதேசங்களைத்  தினமும்  யூட்யூப் மற்றும் பேஸ்புக்  போன்ற தளங்களில் சத்சங்கத்தில்  பேசி வருகிறார். அதன்படி புதிய வீடியோவில் பேசியுள்ள அவர், ‘2003ஆம் ஆண்டு முதல் தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. என்  மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதி என்று நிரூபித்துள்ளேன். ஆன்மீகத் துறையில் நான் எப்போதோ தலைவனாகி  விட்டேன். கைலாசாவில் குடியுரிமை கோரி இதுவரை  40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். கைலாசாவை அமைத்தே தீருவேன்’ என்று சவால் விடுத்துள்ளார். 

ttn

முன்னதாக நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனால் நித்தியின் ஆதரவாளர்களோ, அவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார் என்று கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.