இதுல தோனியை விட கில்லாடி விராட் கோலி..!

 

இதுல தோனியை விட கில்லாடி விராட் கோலி..!

மற்ற வீரர்களை மட்டுமே நம்பி இல்லாமல் தானும் பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வழிநடத்தி வருகிறார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட அதிக முறை இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

தோனி டெஸ்ட் அரங்கில் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு வேறு ஒரு ரூபத்தில் அணியை எடுத்துச்சென்று முதல்முறையாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வென்றார். தோனி கேப்டன் பொறுப்பில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இந்திய டெஸ்ட் அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் நீடித்தது. 

அதன்பிறகு வெளிநாடுகளின் மைதானங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த பிறகு திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி கடந்த 2014ம் ஆண்டு விலகினார். இவரின் கேப்டன் பொறுப்பை பிடித்த விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை மேலும் மெருகேற்றி, மற்ற வீரர்களை மட்டுமே நம்பி இல்லாமல் தானும் பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வழிநடத்தி வருகிறார். 

virat

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் தொடர்ந்து 11 முறை சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு விராட்கோலி முக்கிய பங்காற்றியுள்ளார். அதேபோல் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 

virat

இந்நிலையில் மேலும் ஒரு சாதனையை டெஸ்ட் அரங்கில் விராட்கோலி புரிந்திருக்கிறார். தென்னாபிரிக்காவிற்கு எதிராக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை பாலோ ஆன் செய்யும்படி பணித்தது. இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் எட்டாவது முறையாக எதிரணியை பாலோ ஆன் செய்ய பணித்துள்ளார் விராட் கோலி. இந்திய கேப்டன்களில் மத்தியில் இது தற்போது அதிகபட்சமாக இருக்கிறது. 

இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அசாருதீன் ஏழுமுறை எதிரணியை பாலோ ஆன் செய்ய பணித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் மூலம் முறியடித்து இருக்கிறார் விராட் கோலி. மூன்றாவது இடத்தில் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ஐந்து முறை இதனை செய்திருக்கிறார். நான்காவது இடத்தில் தற்போதைய பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி நான்கு முறை இதனைச் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.