இதுபோல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது: சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த உதயநிதி பேட்டி!

 

இதுபோல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது: சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த உதயநிதி பேட்டி!

தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும் இனி  எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது

சென்னை : பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

suba

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து இதையடுத்து  திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும் இனி  எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

udhay

இந்நிலையில் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோருக்கு ஆறுதல்  கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேனர் கலாச்சாரம் வேண்டாம் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திமுக வலியுறுத்தி வருகிறது. பேனர் தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, சுபஸ்ரீக்கு நிகழ்ந்ததுபோல இனி யாருக்கும் நடக்க கூடாது’ என்றார்.