“இதுதாண்டா போலீஸ்” க்கு எதிரா வந்த  “இதுதாண்டா தீர்ப்பு” -போலீசையே பொதுமக்களுக்கு  85000 ரூபாய் அபராதம் கட்டவைத்தனர்…  

 

“இதுதாண்டா போலீஸ்” க்கு எதிரா வந்த  “இதுதாண்டா தீர்ப்பு” -போலீசையே பொதுமக்களுக்கு  85000 ரூபாய் அபராதம் கட்டவைத்தனர்…  

மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்.எச்.ஆர்.சி)   இரண்டு வெவ்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட  இரண்டு மனுதாரர்களுக்கும்  85000 ரூபாய் இழப்பீடாக வழங்க  தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்.எச்.ஆர்.சி)   இரண்டு வெவ்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட  இரண்டு மனுதாரர்களுக்கும்  85000 ரூபாய் இழப்பீடாக வழங்க  தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பால்சன் என்ற விவசாயி ஒரு வழக்கமான வாகன சோதனைக்காக சாலையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு வழக்கு 2013 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுகிறது . அறிக்கையின்படி, வாகனத்தின் பதிவு சான்றிதழின் நகல்களை பால்சன் போலீசாருக்கு காமித்தார் , இருப்பினும்,  காவல் துறை  துணை ஆய்வாளர் சமுத்திரம் மற்றும் மனோஜ் குமார் அதை ஏற்கவில்லை. அவரது ஓட்டுநர் உரிமத்தை காவல்துறை கேட்டபோது, அது தனது வீட்டில் இருப்பதாகவும், அதை அவர் கொண்டு வருகிறேன்  என்றும் கூறினார். எஸ்.எச்.ஆர்.சி.க்கு அவர் அளித்த மனுவில், மனோஜ் குமார் தன்னை அறைந்து துஷ்பிரயோகம் செய்ததாகவும், கடமையில் இருந்த மற்ற போலீஸ்காரர்களும் அவரைத் தாக்கியதாகவும் பால்சன் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த காவல்துறையினர் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை என்றும், ஆவணங்களைத் கொடுக்கும்படி  கேட்டபோது, பால்சன் காவல்துறையினருக்கு எதிராக மோசமான வார்த்தையை பயன்படுத்தியதாகவும், அவர்களின் சட்டைகளை பிடித்து  இழுத்ததாகவும் கூறினர். அதற்காக காவல்துறையினர் பால்சனை கைது செய்து ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர் என்றனர் .

மனுவை விசாரித்த எஸ்.எச்.ஆர்.சி, காவல்துறை தரப்பில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும், மனுதாரர் இழப்பீடு பெற தகுதியுடையவர் என்றும் கூறினார். பால்சனுக்கு ரூ .60000 இழப்பீடு வழங்க ஆணையம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
2017 இல் பல்லாவரத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்து தகராறு தொடர்பான மற்றொரு வழக்கில்  மனுதாரர், பழைய பல்லவரத்தைச் சேர்ந்த எஸ்.ராஜா பத்மநாபன், மடிபாக்கம் போலீசார் அவரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டினார், மேலும் ஒரு சொத்து வழக்கில் போலீசார்  ஒருபக்கம் சார்பாக  நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். பத்மநாபனை  உறவினரின் வீட்டிற்குச் சென்று அங்கு தாக்கப்பட்டதாகக் கூறினர் . இதற்காக தனது குடும்பத்தினர் மீது மடிபாக்கம் போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்மநாபன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், காவல்துறை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, மனுதாரரின் குடும்பத்தினர் போலீசால் உறவினர்களுக்கு கொலை மிரட்டல்  விடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த மனுவை விசாரித்த எஸ்.எச்.ஆர்.சி, இந்த வழக்கில் மனித உரிமை மீறல் இருப்பதாக தீர்ப்பளித்து, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ .25000 செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிட்டது.