இதுக்கு 24 மணி நேர சஸ்பென்ஸ் தேவையா பிரதமர் மோடி? – சாமானியர்களின் மனக்குமுறல்

 

இதுக்கு 24 மணி நேர சஸ்பென்ஸ் தேவையா பிரதமர் மோடி? – சாமானியர்களின் மனக்குமுறல்

22ம் தேதி மக்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முழு அடைப்பு நடத்த வேண்டும் என்றார். பொது இடத்துக்க செல்ல வேண்டாம், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஊர் அறிந்த விஷயத்தைப் பற்றி பேசினார். கடைசியில் அறிவியல் நமக்கு உதவவில்லை என்று பெரிய குண்டைத் தூக்கப்போட்டார்.

பிரதமர் மோடி நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்கள் மத்தியில் பேசினார். 22ம் தேதி மக்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முழு அடைப்பு நடத்த வேண்டும் என்றார். பொது இடத்துக்க செல்ல வேண்டாம், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஊர் அறிந்த விஷயத்தைப் பற்றி பேசினார். கடைசியில் அறிவியல் நமக்கு உதவவில்லை என்று பெரிய குண்டைத் தூக்கப்போட்டார்.
இத்தனை பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றால் அது அறிவியலா… ஆன்மிகமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. 

corona

கொரோனா பாதிப்பு காரணமாக வேலைக்கு வரவில்லை என்றால் அவர்கள் சம்பளத்தைப் பிடிக்காதீர்கள் என்றார்… இங்கு பலருக்கு வேலையே பறிபோகும் நிலை உள்ளது. இண்டிகோ ஏர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தத்தை அறிவித்துள்ளன. இவற்றை எல்லாம் பேசாமல் அறிவுரையாக கூறிக் கொண்டிருந்தார்.
இதற்கு எதற்கு 24 மணி நேர சஸ்பென்ஸ்… 18ம் தேதியே இதை டி.வி-யில் பேசியிருக்கலாமே. கைகளை சுத்தமாக வைத்திருங்கள், வெளியே செல்லாதீர்கள் என்று சொல்வதற்கே 24 மணி நேரம் தேவையா? என்று பல்வேறு கட்சிகள் தங்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புகின்றன. இந்த கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.
மோடி தொலைக்காட்சியில் பேசப்போகிறார் என்றதும் பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன. கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க நகரங்களின் இயக்கத்தை முடக்க வேண்டும், மக்கள் வெளியே வர தடை விதிக்க வேண்டும், மக்களின் உணவு, பொருளாதார தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் கத்தி கூப்பாடு போட்டுவரும் நிலையில் மோடியின் பேச்சு உப்புசப்பு இல்லாததாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

sunday

கேரளாவில் மக்களுக்கு உதவ வேலைவாய்ப்பு உறுதி, பென்ஷன், இலவச மற்றும் மானிய விலையில் உணவுப் பொருள், மின்சாரம் – தண்ணீர் கட்டணத்தை செலுத்த அவகாசம் என்று பல்வேறு மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய அளவில் இதுபோன்ற அறிவிப்புகள் வருமா என்ற ஏக்கம் ஒவ்வொருவர் மனதிலும் எழுந்துள்ளது.
மருத்துவர் பேசும் விஷயத்தை எல்லாம் பேசிவிட்டீர்கள் பிரதமரே… ஒரு பிரதமராக மக்களுக்கு உறுதி செய்ய வேண்டிய சமூக, பொருளாதார விஷயங்கள் பற்றி எப்போது பேசப்போகின்றீர்கள்?