இதுக்கு நீ தூக்குல தொங்கியிருக்கலாம்…: உடுமலை கௌசல்யா மறுமணத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

 

இதுக்கு நீ தூக்குல தொங்கியிருக்கலாம்…: உடுமலை கௌசல்யா மறுமணத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

உடுமலை கௌசல்யா மறுமணம் செய்து கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும் சிலர் அவரை வசைபாடி வருகின்றனர்.

கோவை:  உடுமலை கௌசல்யா மறுமணம் செய்து கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும் சிலர் அவரை வசைபாடி வருகின்றனர்.

kousalya

உடுமலை சங்கர் கொலையில் பாதிக்கப்பட்ட உடுமலை கௌசல்யா பறையிசை குழு நடித்த வந்த சக்தி என்பவரைக் கோவையில் இன்று திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் கோவை காந்திபுரத்தில்  நடைபெற்றது. இதில் வன்னியரசு மற்றும் எவிடன்ஸ் கதிர்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். 

kousalya

இந்த திருமணத்தில் தம்பதியினர் இருவரும் சாதி மறுப்பு உறுதிமொழியை ஏற்று கொண்டனர். கணவரை இழந்த பின்னர் சாதி ஒழிப்புப் போராளியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்தமாகக்  குரல்கொடுத்து வருகிறார் கௌசல்யா. 

இவர்களது திருமணத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் கூறி வரும் நிலையில், சிலர் இவரது திருமணத்திற்கு எதிராக கருத்துக்களையும் கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக உனக்கு எத்தனை முறை காதல் வரும், இந்த கணவனையும் போட்டு தள்ளிட்டு 3வது திருமணம் செய்து கொள் என்றெல்லாம் வசைபாடி வருகின்றனர்.

kousalya remarriage

பொதுவாக நம் சமூகம் விபத்து, நோவு போன்ற காரணங்களால் கணவரை இழந்த பெண்கள், கணவனிடம் விவாகரத்துப் பெற்றோ, அவனிடமிருந்து விலகியோ தனித்து வாழும் பெண்களுக்கு  ஒரு வட்டம்போட்டுக் கொடுத்து, ‘இதற்குள் வாழ்’ என்கிறது.  இந்தப் பெண்களுக்கான கட்டுப்பாடுகளில் முதன்மையானது… மற்றொரு துணை பற்றிய எண்ணம் வராமல் அவர்கள் தங்களின் குழந்தைகளுக்காக ஒரு தியாக வாழ்க்கை வாழ வேண்டும் என்பது. அவ்வாறு வாழும் பெண்களை, ‘அவ நெருப்பு மாதிரிப் பொம்பள’, ‘புள்ளைகளுக்காகவே வாழுறவ’ என்று துதி பாடித் துதி பாடியே, உணர்வுகளைக் கொன்ற ஒரு வாழ்க்கையை அவள் வாழப் பழக்குகிறது.  

kousalya

ஒரு பெண் விவாகரத்து பெறத் துணியும் போதும் மறுமணம் பெற முடிவுசெய்யும் போதும் குற்றவாளியைப் போல பாவிக்கும் சமூகம், பெண்களுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்துகிறது. இந்த நிலையை நமது பொதுப்புத்தியில் இருந்து மாற்றவேண்டும். முக்கியமாக இன்றைய இளையதலைமுறையினரே இது போன்ற சமூக சிந்தனைகளுக்கு  எதிராக பேசுவது நம் சமூகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பதே  இந்த நிகழ்வின் போது புலப்படும் கசப்பான உண்மை.