இதுக்கு டிரெஸ் போடாமேலே இருக்கலாம்: ஆடை குறித்து பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை!

 

இதுக்கு டிரெஸ் போடாமேலே இருக்கலாம்: ஆடை குறித்து பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை!

நடிகை மாளவிகா மோகனன் தன் உடையை பற்றி மோசமாக பேசியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தன் உடையை பற்றி மோசமாக பேசியவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

பட்டம் போலே என்ற மாளவிகா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

malavuika

அதையடுத்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக செய்து வருகிறார். 

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து ரசிகர் ஒருவர் ‘இந்த டிரஸ்ஸை போடுவதற்கு போடாமலேயே இருக்கலாமே’ என்று கமெண்ட் செய்துத்திருந்தார். அதை பார்த்து கடுப்பான மாளவிகா அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘மரியாதைக்குரிய பெண் எப்படி உடை அணிய வேண்டும் என்று நிறைய கமெண்ட்ஸ் பார்த்தேன். எனக்கு பிடித்ததை அணிந்து மரியாதையாக அமர்ந்துள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்.