’இதற்கு முன் அஜீத் எந்தப் படத்திலும் இப்படி நடந்துகொண்டதில்லை’-இயக்குநர் ஹெச்.வினோத் வெளியிடும் ரகசியம்…

 

’இதற்கு முன் அஜீத் எந்தப் படத்திலும் இப்படி நடந்துகொண்டதில்லை’-இயக்குநர் ஹெச்.வினோத் வெளியிடும் ரகசியம்…

‘நேர்கொண்ட பார்வை’யின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் சரியாக இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அப்பட இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு பேட்டி கொடுக்கும் அனுமதியை வழங்கியிருக்கிறார் அஜீத்.

‘நேர்கொண்ட பார்வை’யின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் சரியாக இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அப்பட இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு பேட்டி கொடுக்கும் அனுமதியை வழங்கியிருக்கிறார் அஜீத். தனது பேட்டியில் இதுவரை எந்தப்படத்துக்கும் காட்டாத ஆர்வத்தை இப்படத்துக்குக்காட்டினார் அஜீத் என்கிறார் வினோத்.

ajith

“அஜித் ஸ்ரீதேவியிடம் கொடுத்த ஒரு வாக்குறுதிக்காக உருவாகியிருக்கும் படம், இது. ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும்போது, அவருக்காக ஒரு படம் நடித்து தருகிறேன் என்று அஜித் அளித்த வாக்குறுதியை மறக்காமல், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில், இந்த படத்தில் நடித்துக் கொடுத்து இருக்கிறார். இது, எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்.

np

அஜித் நடிப்பு, இதுவரை பார்த்திராத அளவுக்கு இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு அஜித்தை, இந்த படத்தில் பார்க்கலாம். அவருடன் நடிப்பு திறமையும், அழகும் மிகுந்த வித்யாபாலன், மனைவி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக அமைந்து இருக்கிறது.

பொதுவாக பெண்களை ஆண்கள் எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்? என்பதே கதையின் கரு. கணவராகவே இருந்தாலும் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படம், இது.

np

அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தை தழுவிய கதை இது என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அமிதாப்பச்சனை 75 வயது பெரியவராக அந்த படத்தில் காட்டியிருந்தார்கள். தமிழில், அஜித் கதாபாத்திரத்தை 47 வயதுள்ளவராக காட்டியிருக்கிறோம். அதாவது அவரது ஒரிஜினல் வயதில் எந்தவித மேக் அப்பும் போடாமல் நடித்திருக்கிறார். அதேபோல் கதையில் இருந்து விலகாமல், தமிழ் படத்துக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘பிங்க்’ படத்தில் சண்டை காட்சிகள் கிடையாது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் 2 சண்டை காட்சிகள் உள்ளன.

இந்தப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக நிறைய புதுமுகங்களை நடிக்கவைத்திருக்கிறேன். அதை அஜீத் சார் மிகவும் பாஸிடிவாக எடுத்துக்கொண்டார். அதே போல் எனக்குத் தெரிந்தவரை அவர் இதற்கு முன் நடித்த படங்களை டப்பிங் பேசுவதற்கு முன் பார்க்கிற வழக்கமில்லை. ஆனால் மிக ஆர்வமாக இந்தப் படத்தைப் பார்த்து படம் முடிந்ததும் என்னைக் கட்டித்தழுவிக்கொண்டார்’என்று மெய்சிலிர்க்கிறார் வினோத்.