இதற்காகத் தான் கெட்ட வார்த்தையில் பொங்கினாரா..? இப்படிப்பட்டவரா சூர்யா..? வெளியானது பகீர் பின்னணி..!

 

இதற்காகத் தான் கெட்ட வார்த்தையில் பொங்கினாரா..? இப்படிப்பட்டவரா சூர்யா..? வெளியானது பகீர் பின்னணி..!

நீட் தேர்வு இருப்பதால் பள்ளிகள் மதிப்பெண் எடுத்தும் பயனில்லை என்பதால் சூர்யா மட்டுமின்றி அவரது தந்தை உள்ளிட்டவர்கள் கூட மத்திய அரசை விமர்சித்து வருவதாகக் காரணம் கூறுகிறார்கள்

புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளருமான சூர்யா பேசிய பேச்சு அவருக்கு கடுமையான எதிர்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது. சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று பாஜகவின் ஹெச்.ராஜா சொன்னார். தமிழிசையோ, ‘இந்த புதிய கல்விக் கொள்கையை அதைப் பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள்.surya

 உதய சூரியனை சின்னமாக கொண்டவர்தான் பேசுகிறார்கள் என்றால், நடிகர் சூர்யாவும் பேசுகிறார்’என்று சாடினார். கல்வித் துறை அமைச்சர்கள் யாரும் சூர்யாவுக்கு பதில் சொல்லாத நிலையில், சினிமா துறையை உள்ளடக்கிய செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, ‘சூர்யா அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார்’ என்று கடுமையாக பேசினார்.surya

இத்தனை பேர் இவ்வளவு கண்டித்தும் சூர்யா தர்பபில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.  அவர் பேசியதற்கான காரணம் இப்போது வெளி வந்திருக்கிறது.  சூர்யா சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் நாமக்கல் பகுதியில் உள்ளன. நாமக்கல் மாவட்டம் நீட் தேர்வுக்கு முன் கொடிகட்டிப்பறந்தது. அதாவது மருத்துவருக்கு  படிக்க வேண்டும் என்றால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  குறிப்பிட்ட பள்ளிகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து 11 மற்றும் 12ம் வகுப்புகளில் சேர்த்து விடுவர். அங்குள்ள பள்ளிகளும் 11ம் வகுப்பு தேர்விற்கு மாணவர்களை தயார் படுத்தாமல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நேரடியாக மாணவர்களை தயார் படுத்தி வந்தனர். surya

இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவராக எளிதில் தேர்வாகினர். இதனால் அந்தப்பளிகளில் சேர்த்துக் கொண்டு பல கோடிகளை சம்பாதித்து வந்தன. இதே போன்ற பள்ளிகள் நடிகர் சூர்யாவின் உறவினர்களுக்கு சொந்தமாக நாமக்கல் மாவட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது நீட் தேர்வு இருப்பதால் பள்ளிகள் மதிப்பெண் எடுத்தும் பயனில்லை என்பதால் சூர்யா மட்டுமின்றி அவரது தந்தை உள்ளிட்டவர்கள் கூட மத்திய அரசை விமர்சித்து வருவதாகக் காரணம் கூறுகிறார்கள்