இதயத் துடிப்பை கண்காணிக்கும் ‘ஹூவாய் பேண்ட் 4’ நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியீடு

 

இதயத் துடிப்பை கண்காணிக்கும் ‘ஹூவாய் பேண்ட் 4’ நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியீடு

ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது.

டெல்லி: ஹூவாய் நிறுவனத்தின் பேண்ட் 4 நாளை முதல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது.

ஹூவாய் பேண்ட் 4 இந்திய சந்தையில் நாளை முதல் விற்பனைக்கு வெளியாகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் (பிப்ரவரி.2) ஹுவாய் பேண்ட் 4 பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வெளியாகிறது. ஆஃப்லைன் ஷோரூம்களில் கிடைக்குமா என்பது பற்றி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த விலையில் விற்பனை செய்யப்படும். பின்பு ரூ.2099 விலையில் விற்கப்படும். கிராஃபைட் பிளாக் நிறத்தில் மட்டும் இந்த சாதனம் கிடைக்கிறது.

ஹூவாய் பேண்ட் 4 மாடலின் சிறப்பம்சங்களாக 0.96 இன்ச் டி.எஃப்.டி கலர் டிஸ்பிளே, அப்போலோ 3 மைக்ரோபிராசஸர், ஒன்பது உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி, 24 மணி நேரமும் இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம், உடலில் ஏற்படும் ஆறு வெவ்வேறு வகையிலான உறக்கம் சார்ந்த குறைபாடுகளை கண்டறியும் திறன், நேரடியாக சார்ஜ் செய்யும் வசதி, ஃபைண்ட் மை போன், ரிமோட் ஷட்டர், 91 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒன்பது நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.