இண்டிகோ விமான நிறுவனத்திடம் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வழக்கு

 

இண்டிகோ விமான நிறுவனத்திடம் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வழக்கு

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பை: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டைம்ஸ் நவ், என்.டி டிவி, தி டெலிகிராப், இ.டி நவ் போன்ற பிரபலமான ஊடகங்களில் பணிபுரிந்த பிறகு தற்போது ரிபப்ளிக் டிவி என்ற சேனலுக்கு சொந்தக்காரர் அர்னாப் கோஸ்வாமி. பத்திரிகை மற்றும் டிவி சேனல் உலகில் இவர் மிகவும் பிரபலமான ஊடகவியலாளர் ஆவார். இவர் கடந்த 28-ஆம் தேதி மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து இருக்கையில் காமெடி நடிகர் குணால் காம்ரா உட்கார்ந்து இருந்தார். இந்த நிலையில், அமைதியாக பயணம் செய்து கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமியை குணால் காம்ரா தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். இதற்கு அர்னாப் எந்த விதமான எதிர்வினையும் ஆற்றவில்லை.

இந்த சம்பவத்தை குணால் காம்ராவே தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். சக பயணியை இவ்வாறு புண்படுத்தலாமா என்றும் கமெண்ட்களில் காம்ராவை கண்டித்தனர். இந்நிலையில், சக பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட காம்ராவுக்கு இண்டிகோ நிறுவனம் அவர்களின் விமானங்களில் பறக்க ஆறு மாதங்கள் தடை விதித்தது. இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக இண்டிகோ நிறுவனம் ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என குணால் காம்ரா இண்டிகோ விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.