இணையத்தில் வைரலாகும் நியூ பிளக்ஸ் சேலஞ்ச்! 

 

இணையத்தில் வைரலாகும் நியூ பிளக்ஸ் சேலஞ்ச்! 

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் வைரலானது. பக்கெட் முழுவதும் உள்ள குளுந்தண்ணியை அப்படியே எடுத்து தன் மீது ஊற்ற வேண்டும். இதையடுத்து கீகீ சேலஞ்ச், கார் நகர நகர இறங்கி டான்ஸ் ஆட வேண்டும், இதையடுத்து வந்தது பிட்னஸ் சேலஞ்ச் பிரதமர் மோடி முதல் இந்திய கேப்டன் விராட் கோலி வரை இந்த சேலஞ்ச் பிரபலமானது. இதையடுத்து தற்போது நியூ பிளக்ஸ் சேலஞ்ச் ஒன்றை விடுத்துள்ளார். 

இந்த சேலஞ்ச் விதிகளின் படி, தரையில் குப்புறப் படுத்து கைகளை, பின்புறமாக கட்டிக்கொள்ளவேண்டும். பின்னர், கைகளின் உதவி இல்லாமல் கால்களை உந்தித்தள்ளி தரையிலிருந்து மேலே எழுந்திருக்கவேண்டும். உடல் வலுவை நிரூபிப்பதற்காக படுத்துக் கொண்டே செய்ய வேண்டிய இந்த சவாலை செய்ய முயற்சித்துவருகின்றனர்.