இணையத்தில் வெளியான ‘தடம்’ : மீண்டும் கைவரிசை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்!

 

இணையத்தில் வெளியான ‘தடம்’ : மீண்டும் கைவரிசை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம்  திரைப்படத்தைத் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்தது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தடம்  திரைப்படத்தைத் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் செய்தது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் தடம் படம் நேற்று  தமிழகம் முழுவதும் வெளியானது. குற்றம் – திரில்லர் திரைப்படமான இப்படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டு , அவர்களிடம் இருந்து நேர்மறையான நல்ல வரவேற்பை பெற்றது. 

arun vijay

இந்நிலையில் தடம் திரைப்படம் ரிலீசான சிலமணிநேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். இதனை பலரும் டவுன்லோட் செய்து பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. தடம் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், தமிழ் ராக்கர்ஸின் இந்த செயலால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

arun ttn

தமிழ் சினிமாவுக்கு கடும் சவாலாக இருக்கும் பைரசியில் தடம்  திரைப்படமும் சிக்கியுள்ளது. இதுபோன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாகத் திரைப்படங்கள் ரிலீசானால், அதில் உழைத்த படக்குழுவுக்குத் தான் நஷ்டம். முன்னதாக இந்த பூச்சாண்டி காட்டும் பைரசிக்காரர்களை பிடித்துக் காட்டுகிறேன் என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் சவால்விட்டிருந்தார். ஆனால்  திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாவதைத் தடுப்பது திரையுலகிற்குக் குதிரைக் கொம்பாகியுள்ளது.