இணையத்தில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் லீக் ஆனது

 

இணையத்தில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் லீக் ஆனது

ரியல்மி பிராண்டு விரைவில் வெளியிட இருக்கும் ‘ரியல்மி யு1’ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றி இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

டெல்லி: ரியல்மி பிராண்டு விரைவில் வெளியிட இருக்கும் ‘ரியல்மி யு1’ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றி இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

ஓப்போ துணை பிராண்டான ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அடுத்த வாரம் ‘ரியல்மி யு1’ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. வருகிற நவம்பர் 28-ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 13 எம்.பி + 2 எம்.பி டூயல் பிரைமரி கேமரா, 25 எம்.பி செல்ஃபி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை வழங்கப்படுகிறது.

ரியல்மி யு1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2350×1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்

– 900MHz ARM மாலி-G72 MP3 GPU

– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

மெமரிய கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ

– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2

– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4

– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் சில நாட்களில் தெரிய வரும் என்று கருதப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.