இணையதளத்தில் ஏமாறும் இன்ஜினியர்கள் -“தாய்லாந்து”க்குப்போக ஆசைப்பட்ட “சாப்ட்வேர்” தாயிடம்  94000 ரூபாய்  ஆட்டைய போட்ட ஆன்லைன் அரக்கர்கள் 

 

இணையதளத்தில் ஏமாறும் இன்ஜினியர்கள் -“தாய்லாந்து”க்குப்போக ஆசைப்பட்ட “சாப்ட்வேர்” தாயிடம்  94000 ரூபாய்  ஆட்டைய போட்ட ஆன்லைன் அரக்கர்கள் 

பெங்களூருவில் ஹரலூர் சாலையில் வசிக்கும் ரஞ்சிதா என்ற 5 வயது குழந்தையின் தாயான இவர் ஒரு மென்பொருள் என்ஜினீயர் .தன்  குழந்தை மற்றும் கணவரோடு கிறிஸ்மஸ் விடுமுறையை தாய்லாந்தில் கொண்டாட விரும்பி, இணையதளங்களில் இருக்கும் ட்ராவல் நிறுவனங்களை தேடினார் .

பெங்களூருவில் ஹரலூர் சாலையில் வசிக்கும் ரஞ்சிதா என்ற 5 வயது குழந்தையின் தாயான இவர் ஒரு மென்பொருள் என்ஜினீயர் .தன்  குழந்தை மற்றும் கணவரோடு கிறிஸ்மஸ் விடுமுறையை தாய்லாந்தில் கொண்டாட விரும்பி, இணையதளங்களில் இருக்கும் ட்ராவல் நிறுவனங்களை தேடினார் .இதை எப்படியோ தெரிந்துகொண்ட ஒரு ஆன்லைன் மோசடி  trip wiser நிறுவனத்தை சேர்ந்த நீரஜ் மற்றும் பவன கன்வல் ஆகியோர் ரஞ்சிதாவிடம் தொடர்பு கொண்டு ,டெல்லியை சேர்ந்த தாங்கள் தாய்லாந்துக்கு அழைத்து செல்கிறோம், அதற்காக பணத்தை எங்கள் அக்கௌண்டுக்கு  கூகுள் pay மூலம்  transfer செய்யுங்கள்,உடனே டிக்கெட்டுகள் உங்கள் வீடு தேடி வரும்  என்று கூறினார்கள் .

online transfer

இதை நம்பிய அந்த சாப்ட்வேர் தாய் தாய்லாந்துக்கு போகும் ஆசையில் அவர்கள் கேட்ட 94000க்கும் மேற்பட்ட தொகையை அவர்களுக்கு அனுப்பினார் .அதற்கப்புறம் அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் அப்பெண் போராடினார் 
இப்போது அப்பெண்  போலீசை தொடர்பு கொண்டு அவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார் ,போலீசார் பிரிவு 406,மற்றும் 420 கீழ் புகார் பதிவு செய்து ,வழக்கை சைபர் க்ரைமுக்கு அனுப்பியுள்ளனர்