இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி? 

இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி? 

வீட்டில் பொதுவாக மீந்துபோன இட்லியைத் தூக்கி எரியும் பழக்கம் சில வீடுகளில் உள்ளன. ஆனால் அப்படித் தூக்கி எரியாமல் மீந்துபோன இட்லியை வைத்து இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காணலாம் 

வீட்டில் பொதுவாக மீந்துபோன இட்லியைத் தூக்கி எரியும் பழக்கம் சில வீடுகளில் உள்ளன. ஆனால் அப்படித் தூக்கி எரியாமல் மீந்துபோன இட்லியை வைத்து இட்லி மஞ்சூரியன் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காணலாம் 

தேவையான பொருட்கள்: 

இட்லி – 6 
மைதா மாவு- 1 தேக்கரண்டி 
கடலைமாவு- 1 தேக்கரண்டி 
இஞ்சி, பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 
சோயா சாஸ்- 1 தேக்கரண்டி 
முந்திரி-4 
தக்காளி-1 
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி 
எண்ணெய் – தேவையான அளவு 
உப்பு- தேவையான அளவு 

எப்படி செய்வது? 

இட்லியை சதுரவடிவில் வெட்டி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலைமாவு,இஞ்சி, பூண்டு விழுது,முந்திரி,தக்காளி,சோயா சாஸ்,உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். 

idli manchurian

பின்பு ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும். பின்பு அந்த கலவையில் இட்லி துண்டுகளை முக்கி பொரித்து எடுக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அது மேல் தூவி சுடச்சுடப் பரிமாறவும்.