இட்லி… பொங்கல்… பூரி… கிச்சடி உண்டு! சர்வம் வடகறி மயம்!.

இட்லி… பொங்கல்… பூரி… கிச்சடி உண்டு! சர்வம் வடகறி மயம்!.

பெரம்பூர் பஸ் டெப்போ அருகில்,கங்கா பேக்கரிக்கு எதிரில் திரு.வி.க நகர் 20-வது தெரு முனையில் இருக்கிறது கருப்பசாமியின் சின்னஞ்சிறு வண்டிக்கடை. அவர், அவருடைய மனைவி, பெற்றோர் நால்வரும்தான் கடையை நடத்துகிறார்கள். காலை ஒரு வேளை  மட்டுமே கடை திறக்கிறார்கள்.

vadakari

இட்லி ,பொங்கல், பூரி , கிச்சடி நாலே ஐட்டங்கள்தான்.எல்லாவற்றுக்கும் ஒரே தொடுகறி வடகறிதான். நோ சட்னி சாம்பார். அதிசயமாகத்தானே இருக்கிறது? ஆனால் அங்கே போனால் ஆச்சரியப்படுவீர்கள். கருப்பசாமியின் வடகறி தெற்கில் குரோம்பேட்டை தொடங்கி வடக்கே ராயபுரம் வரை ரசிகர்களை அழைத்து வருகிறது.

தட்டில் தையல் இலை போட்டு இட்லியோ, பூரியோ கேட்பதை வைத்து தாராளமாக.வடகறியை விரவித் தருகிறார்கள். மறுபடி கேட்டாலும் வடகறி கிடைக்கிறது. சாப்பிடுபவர்களுக்கு இணையாக பார்சல்களும் பறக்கின்றன!
முக்கியமாக பள்ளிப் பிள்ளைகளை அழைத்து வந்து இட்லி வடகறி வாங்கிக் கொடுப்போர்,டிஃபன் பாக்சில் பார்சல் வாங்கிக் கொடுத்தனுப்புவோர் என்று வரிசை காட்டுகிறார்கள்.

vadakari-01

இதற்கு இரண்டு காரணங்கள்,ஒன்று கருப்பசாமியின் வடகறியின் சுவை. இரண்டாவது அதன் விலை. மூன்று பூரி, அல்லது நான்கு இட்லியுடன் வேண்டிய அளவு வடகறி எல்லாம் சேர்த்து 30 ரூபாய்தான். அதே போல, பொங்கல், கிச்சடி எல்லாமே தாராளமாகத் தருகிறார்கள். அனைத்தும் அதே 30 ரூபாய்தான்.
காலை 7.30-க்கு கடை திறக்கிறார்கள்.8.30க்கு பூரி தீர்ந்துவிடுகிறது. அடுத்த ஒருமணி நேரத்தில் இட்லியும் தீர்ந்து விடுகிறது. பொங்கலும் கிச்சடியும் பத்தரை வரை தாக்குப் பிடிக்கின்றன. 

மறுபடி மறுநாள்தான் கடை!. ஒரே ஒரு வடகறியை வைத்து முப்பது வருசமாக ஊரையே கட்டிப்போட்டு வைத்திருக்கும்  கருப்பசாமியின் குடும்பம்,வாழ்க!