இட்லியும் எலும்புக் குழம்பும்! தொழுதூர் அக்கா கடை!

இட்லியும் எலும்புக் குழம்பும்! தொழுதூர் அக்கா கடை!

நெடிஞ்சாலைகளில் வெளியே தெரியாத பல சிறப்பான உணவகங்கள் இருக்கின்றன. அதில் தொழுதூர் முக்கியமானது இந்த தொழுதூர் அக்கா கடை.சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் 252வது கிலோமீட்டரில் தொழுதூர் மேம்பாலம் வரும்.( சென்னையில் இருந்து திருச்சி போகும்போது) அந்த மேம்பாலத்தின் இருபுறமும் பிரியும் சர்வீஸ் சாலைகளில் இரு புறமும் நிறைய லாரிகள் நிற்பதை எப்போதும் பார்க்கலாம்.அதற்கு காரணம் ரெட்டியார் மெஸ் என்கிற அக்கா கடை.

akka kadai

காலையில் 7.30க்கே கடையை திறந்து விடுகிறார் வசந்தி.அந்த விடிகாலை நேரத்தில் சூடான இட்லி,கல்தோசை ( இங்கே கட்டை தோசை என்கிறார்கள்) பூரி தருகிறார்கள். இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் இருந்தாலும் இங்கே ஸ்பெஷல் எலும்புக் குழம்புதான்.கூடவே நேற்று இரவு வைத்த கருவாட்டுக் குழம்பும் மீன்குழம்பும்கூட கிடைக்கும்.ஆரம்பத்தில் ஐந்தாறு கல்லூரி மாணவர்களுக்காக சமைக்கத் தொடங்கி இருக்கிறார் வசந்தி.ஒரே மாதத்தில் இவரது கைமணம் கல்லூரி மாணவர்களிடையே பரவா ஐந்து பேர் என்பது என்பது பேர் ஆகிவிட்டதாம்.

akka kadai

அப்புறம் அந்த வழியே போகிற வருகிற லாரிக்காரர்களும் சேர்ந்து கொள்ள இப்போது பரபரப்பான உணவகமாகிவிட்டது.வசந்தியின் அன்றைய மன நிலையைப் பொறுத்ததுதான் மெனு.தோன்றுவதை சமைக்கிறார்.ஆனால் கருவாட்டுக் குழம்பு மட்டும் எப்போதும் உண்டு.சாப்பாடு 70 ரூபாய்.மட்டன் ஒரு கிண்ணம் 25 ரூபாய்.மீன் குழம்பும் ரசமும் பிரமாதம்.போதாதா,லாரிக்காரர்கள் அணி,அணியாக வருகிறார்கள்.ஆரம்பத்தில் கல்லூரிப் பிள்ளைகளால் அக்கா என்று அழைக்கப்பட்ட வசந்தி இப்போது அவரை விட வயதில் மூத்த லாரி டிரைவர்களுக்கும் அக்காதான்.

meen kulambhu

வசந்தியுடன் சுசீலா,மணி என்று இரண்டு உள்ளூர் ‘மாஸ்ட்டர்’கள் இருவர்தான் சமையல். அன்று என்ன கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் மெனுவைத் தீர்மானிக்கிறார்கள்.ஆனா,எப்போது போனாலும்,கட்டை தோசையோ ,சப்பாத்தியோ உண்டு, கூடவே வசந்தி அக்காவின் பிராண்ட் அம்பாசிடரான கருவாட்டுக் குழம்பும்.