இட்லியிலும் அசத்தும் ,திண்டுக்கல் சிவா பிரியாணிக் கடை!

 

இட்லியிலும் அசத்தும் ,திண்டுக்கல் சிவா பிரியாணிக் கடை!

திண்டுக்கல் இப்போது பிரியாணி நகரமாகிவிட்டது.தலப்பாக்கட்டி,வேணு பிரியாணி,பொன்ராம் பிரியாணி என்று எத்தனையோ கடைகள் வந்து, தமிழகமெங்கும் கடை பரப்பிய ஊரில் அவளவாக வெளியில் தெரியாம இருப்பது சிவா பிரியாணிக்கடை.வேணு பிரியாணி இருக்கும் அதே தெற்கு ரதவீதில்தான் சிவா பிரியாணியும் இருக்கிறது.

திண்டுக்கல் இப்போது பிரியாணி நகரமாகிவிட்டது.தலப்பாக்கட்டி,வேணு பிரியாணி,பொன்ராம் பிரியாணி என்று எத்தனையோ கடைகள் வந்து, தமிழகமெங்கும் கடை பரப்பிய ஊரில் அவளவாக வெளியில் தெரியாம இருப்பது சிவா பிரியாணிக்கடை.வேணு பிரியாணி இருக்கும் அதே தெற்கு ரதவீதில்தான் சிவா பிரியாணியும் இருக்கிறது.

siva briyani shop

ஒரே வித்தியாசம் இந்தஹோட்டல் மாலை ஆறுமணிக்குப் பிறகுதான் திறக்கப்படுகிறது.திண்டுகல் பிரியாணிக்கும் மற்ற ஊர் பிரியாணிகளுக்கும்  அடிப்படை வித்தியாசங்கள் சில இருக்கின்றன. உதாரணமாக இந்த ஊர் பிரியாணியில் தக்காளி சேர்ப்பதில்லை,தவிர திண்டுக்கல் பிரியாணியில் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போன்ற எத்வுமே உங்கள் கையில் தட்டுப்ப்டாது.
அதற்கு காரணம்,மசால் ஐட்டங்கள் அனைத்தையும் முதல்நாளே ஊறவைத்து அரைத்துச் சேர்த்துவிடுகிறார்கள்.

food

சிவா பிரியாணிக்கடையின் நிறுவனர் பெயர் கணேசன்.அவர் 
இதே ஊரில் முப்பது வருடம் முன்பு இருந்த பங்காரம் பிரியாணிக்கடையில் வேலை செய்து,பிறகு தனியாக தள்ளுவண்டிக் கடை துவங்கி,இப்போது இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.இங்கே தயாரிக்கும் பிரியாணியை , தால்ச்சா,ஊறுகாய்,கறிக்குழம்பு போன்ற பக்கவாத்தியங்கள் எதுவும் இல்லாமலே சாப்பிட முடியும் என்கிறார்.சுத்தமான நெய்யில் இங்கே அருகிலேயே விளையும் தொப்பம்பட்டு சீரகசம்பாவில்தான் சிவா பிரியாணி தயாரிக்கப் படுகிறதாம்.

idly

முழுப்பிளேட் 360 ரூபாய்,இரண்டு பேர் தாராளமாகச் சாப்பிடலாம்,அரைப் பிளேட் 180 ரூபாய்,எம்ட்டி பிரியாணி 90 ரூபாய்.சுக்கா,நாட்டுக்கோழி உட்பட மற்ற ஐட்டங்கள் எல்லாம் 100 ரூபாய்க்கு உள்ளேதான்.

ஞாயிற்றுக் கிழமை மட்டும் மதியம் 12 மணிக்கே திறந்து விடுகிறார்கள். இங்கே பிரியாணி மட்டுமல்ல இட்லி மற்றும் தோசையும் கூட சிறப்பாக இருக்கின்றன.
இட்லிக்கு மூன்று வகையான குழம்புகள் தருகிறார்கள். ஆட்டுக்கால் பாயா,நாட்டுக்கோழி குழம்பு,மிளகுக் குழம்பு என்கிற அந்த மூன்று குழம்புகளுமே சிறப்பாக இருந்தாலும்,மிளகுக் குழம்புதான் சூப்பர் ஸ்டார்.
நன்றாக வெந்த நாட்டுக்கோழியை தோசைக்கல்லின் மேல் போட்டு, தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி,பெப்பர்தூவி,புரட்டி எடுத்து நாட்டுக்கோழி சாப்ஸ் என்கிற பெயரில் தருகிறார்கள். மிகவும் சிறப்பாக இருக்கிறது.
பெயரா முக்கியம்,கோழி குருடாக இருந்தாலும் நமக்கு குழம்புதான் முக்கியம்னு அந்த மகான் தான் சொல்லி இருக்கிறாரே!