இட்லிகேத்த மட்டன் குழம்பு செய்வது எப்படி?

 

இட்லிகேத்த மட்டன் குழம்பு செய்வது எப்படி?

இது கொங்குப் பகுதியில் பிரபலமாக இருக்கும் செய்முறை. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீர்கள்.

இது கொங்குப் பகுதியில் பிரபலமாக இருக்கும் செய்முறை. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள் அப்புறம் விடவே மாட்டீர்கள்.

எப்படிச் செய்வது!

½ கிலோ மட்டனுக்கு ( கொஞ்சம் கொழுப்புடன் இருக்கட்டும்)

வறுத்து அரைக்க:

தக்காளி  2
சின்னவெங்காயம் 6
காய்ந்த மிளகாய் 6
இஞ்சி 2 இஞ்ச் துண்டு
பூண்டு 10 பற்கள்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
ஏலக்காய்,பட்டை,கிராம்பு
தேங்காய் துருவல் 1 கப்
மல்லித்தூள் 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்

 

தாளிக்க:

பெரியவெங்காயம் 1
தக்காளி 1
புதினா,கொத்துமல்லி தலா ஒரு கைப்பிடி.
பிரிஞ்சி இலை 1
கறிவேப்பிலை
கடலை எண்ணெய் 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டு உள்ளவற்றில் மல்லித்தூள்,தேங்காய் துருவல்,மஞ்சள்தூள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் துருவலைச் சேர்த்து வதக்கவும்.அதன் பிறகு அடுப்பை அனைத்துவிட்டு, மல்லித்தூளையும்,மஞ்சள்தூளையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி ஆறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

mutton-curry

இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து,அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு,பிரிஞ்சி இலை வெங்காயம் சேர்த்து சிறிதளவு உப்புப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும்,தக்காளி,மல்லி,புதினா,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் கழுவி வைத்திருக்கும் மட்டனையும்,அரைத்து வைத்திருக்கும் மசாலையும் சேர்த்து கிளறி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். சாப்பிடப்போகும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீரும்,உப்பும் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கினால் மட்டன் குழம்பு ரெடி!