இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுகவை முந்தியடித்து செல்கிறது அதிமுக..!

 

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுகவை முந்தியடித்து செல்கிறது அதிமுக..!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகள் வாக்கு எண்ணிக்கைகளின்  தற்போதைய நிலவரத்தைக் காணலாம். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தான் வெற்றி பெரும் என்று அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை போலவே, அதிமுக  இரு தொகுதி வாக்கு எண்ணிக்கைகளிலும் திமுகவை முந்தியடித்து கொண்டிருக்கின்றது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகள் வாக்கு எண்ணிக்கைகளின்  தற்போதைய நிலவரத்தைக் காணலாம். 

Vote counting

விக்கிரவாண்டி தொகுதி: 

அதிமுக 51,786 வாக்குகளும், திமுக 31,859 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,316 வாக்குகளையும் பெற்றுள்ளன. இந்த தொகுதியில் அதிமுக 19,927 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 

நாங்குநேரி தொகுதி: 

அதிமுக 9,381 வாக்குகளும், காங்கிரஸ் 6,348 வாக்குகளும் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி 274 வாக்குகளும் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக 3,033 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.