இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

 

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்

சென்னை: இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவை தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எதிர்வரவிருகும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரெட் அலெர்ட் வானிலை எச்சரிக்கை, வழக்குகள் உள்ளிட்டவைகளை சுட்டி காட்டி தலைமை செயலர் கேட்டுக் கொண்டதால் இந்த தொகுதிகளுக்கு பின்னர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த 18 தொகுதிகள் உள்பட ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்கு முனதாக தேர்தல் நடத்தப்படும் எனவும், தகுதி நீக்கத்திற்கு எதிராகத் தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யவில்லை என்றால் 18 தொகுதிகளையும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், இலங்கை பிரதமராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை. எனினும், இலங்கையில் முன்பு செய்த தவறை ராஜபக்சே செய்யமாட்டார் என நம்புவோம் என்றார்.