இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்கள் நியமனம்: ரேசுக்கு ரெடியாகும் அதிமுக!

 

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பொறுப்பாளர்கள் நியமனம்: ரேசுக்கு ரெடியாகும் அதிமுக!

காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமனம் செய்துள்ளது.

சென்னை: காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமனம் செய்துள்ளது.

முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் அவர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியாகியது.

தகுதிநீக்கம் செல்லும் என அந்த தீர்ப்பு வெளியாகியதால், 18 தொகுதிகளும் காலியானதாக அறியப்பட்டது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளும் காலியாக இருக்கிறது.

இந்நிலையில், இடைத்தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக தலைமை கழகம் நியமனம் செய்துள்ளது.

குறிப்பாக, தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.