இடைத்தேர்தலுக்கு தயாரா? திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

 

இடைத்தேர்தலுக்கு தயாரா? திருவாரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததையடுத்து, காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தொகுதியை தக்கவைக்க திமுகவும், தொகுதிய கைப்பற்ற அதிமுக, அமமுக போன்ற கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகள் செய்து வருகின்றன. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், “இடைத்தேர்தலை எதிர்கொள்ள திருவாரூர் மாவட்டம் தயராகி வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியான திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர், நாளை முறைப்படி அறிவிக்கை வெளியிடுவார். 

தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவின கட்டுபாடுக்களை கண்காணிக்க 9 பறக்கும் படைகளும், 6 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.