இடைத்தேர்தலுக்குப் பிறகு இருக்கு விளையாட்டு…. குமாரசாமி பேட்டி!

 

இடைத்தேர்தலுக்குப் பிறகு இருக்கு விளையாட்டு…. குமாரசாமி பேட்டி!

kumarasamy

தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமே தேர்தல் திருவிழா துவங்கி விட்டாலே அரசியல் தலைவர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. இந்நிலையில், இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியான பிறகு கர்நாடக அரசியலில் புது விளையாட்டு இருக்கு என்று பெங்களூருவில் குமாரசாமி பேட்டியளித்தார். தேசிய கட்சிகளுடன் இனி நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் புதிய விளையாட்டு தொடங்கும். எடியூரப்பா மீதமுள்ள ஆட்சி காலத்தை நிறைவு செய்வார் என்ற எங்களின் கருத்துக்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். நாங்கள் பாரதிய ஜனதாவிடம் சரண் அடையவில்லை. அதே சமயம் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேரும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார். மேலும், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள்.  அரசியலில் வியூகம் வகுத்து செயல்படுவது தான் முக்கியம். யுத்தம் என்று வந்து விட்டால், குடும்பம், நண்பர்கள் என்று யாரையும் பார்க்க முடியாது என்று கூறினார்.