இடைத்தேர்தலுக்காக மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறவும் தயார்: டிடிவி தினகரன் அதிரடி!

 

இடைத்தேர்தலுக்காக மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறவும் தயார்: டிடிவி தினகரன் அதிரடி!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்படக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் எதுவும் நடக்கவில்லை என அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்படக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் எதுவும் நடக்கவில்லை என அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் அருகேயுள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய  தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்கவே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அதே நேரத்தில் இடைத்தேர்தலுக்காகத் தகுதி நீக்கத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறவும் தயார்’ என்று கூறியுள்ளார்.

‘மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் எதுவும் நடக்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் உள்படக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒன்றாகச் சேர்ந்து அனைத்திலும் வெற்றி பெறுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.