இடைத்தேர்தலில் ப.சிதம்பரம் பிரச்சாரம் ! பிரச்சாரம் செய்ய ஜாமீன் கேட்பாரா ப.சிதம்பரம்?

 

இடைத்தேர்தலில் ப.சிதம்பரம் பிரச்சாரம் ! பிரச்சாரம் செய்ய ஜாமீன் கேட்பாரா ப.சிதம்பரம்?

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்வார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்வார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி  சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டேபார் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட உள்ள நிலையில், திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி உள்ளனர். தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 40 பேரும் அங்கீகாரமில்லாத கட்சிகள் சார்பில் 20 பேரும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். திமுகவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, உதயநிதி மற்றும் எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் வழங்கியுள்ள பட்டியலில் கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், குஷ்பு ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்த பட்டியலில் ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் எப்படி பிரச்சாரத்துக்கு வருவார் என சிலர் கேள்வி எழுப்பி உள்ள நிலையில், அதற்குள் ஜாமின் கிடைத்து வெளியில் வந்து பிரச்சாரம் செய்வார் என்ற நம்பிக்கையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அவருடைய பெயரை போட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Chidambaram

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்ட கே.பி.கே.செல்வராஜ் பெயர் இடம் பெற்றிருந்தது. பின்னர் செல்வராஜின் சகோதரர் பெயர் ஜெயக்குமார் பெயருக்கு பதிலாக தவறாக இடம்பெற்று விட்டதாக காங்கிரஸ் விளக்கம் அளித்திருந்தது.

இதற்கிடையே நாங்குநேரி தொகுதியில் திமுக வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் திமுக எம்.பி. கனிமொழி