இடைத்தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை – மு.க ஸ்டாலின் திட்டவட்டம்

 

இடைத்தேர்தலில் கூட்டணிக்கு இடமில்லை – மு.க ஸ்டாலின் திட்டவட்டம்

நாட்டின் 17 –  ஆவது நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 -ஆம் தேதி முதல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18 – ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

சட்டமன்ற இடைத் தேர்தல் 

இந்நிலையில், இந்த பாராளுமன்றத் தேர்தலுடன் இணைந்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மரணம்  காரணமாக காலியான தொகுதிகள் உட்பட மொத்தம் 21 தொகுதிகள் தமிழகத்தில் காலியாக உள்ளன.

ஆனால், தற்போது 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

dmk congress

கூட்டணி பரபரப்புகள் 

இந்நிலையில், கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளும் ஒரு வழியாக நடந்து முடிந்து, தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையிலேயே வேட்பாளர்களுக்கான நேர்காணல்களும் நடந்து வருகின்றன.

மற்ற கட்சிகளைப் போலவே, வரும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தற்போது எந்தெந்த தொகுதி எந்தெந்த கட்சிக்கு என்பது குறித்த பணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபடு வருகிறார்.

stalin

தனித்துப் போட்டி 

இந்த நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் தி.மு.க.தான் போட்டியிடும் என்றும் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களவைத் தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்றும் இடைத்தேர்தலில் கூட்டணி கிடையாது என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.ஏற்கனவே, 18 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுவதால் இந்த தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடியாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.