இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்!

 

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்!

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடைக்கால மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

புதுதில்லி: கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடைக்கால மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் ஆண்டில் புதிய அரசு அமையும் வரை செய்ய வேண்டிய செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு நடைமுறையாகக் கருதப்படுகிறது. ஆனால், இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தலுக்கு முன்னதாக வருவது என்பதால், அதில் மக்களைக் கவரும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. 

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், தற்காலிக நிதியமைச்சராக ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

modi

தற்போதைய பட்ஜெட்டிலும் முக்கியமான சலுகைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளைக் கவரும் வகையில் மிகப்பெரிய சலுகை திட்டம், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலையான வருமானத்தை உறுதிப்படுத்தும் குறைந்தபட்ச வருமான திட்டம் போன்ற சலுகைகள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி வரும்  13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.