இடியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி..!

 

இடியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி..!

தமிழகத்தில் பருவ மழை துவங்கியதால் ஆங்காங்கே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பருவ மழை துவங்கியதால் ஆங்காங்கே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை வைத்தூர் கிராமத்தில் நேற்று வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகள் நான்கு பேர் இடி தாக்கியதால் உயிரிழந்தனர். அதே போல் பெரம்பலூர்  மற்றும் நசரத் பேட்டையில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக  அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Tamilnadu government

முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இடியால் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப் படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் பருவ மழை துவங்கி விட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.