இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 62 மணி நேரம் கழித்து மீட்பு

 

இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 62 மணி நேரம் கழித்து மீட்பு

கட்டிட விபத்தில் சிக்கிய 62 மணி நேரம் கழித்து இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

தார்வார் :

கட்டிட விபத்தில் சிக்கிய 62 மணி நேரம் கழித்து இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் நடந்த பெரும் கட்டிட விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணி மூன்றாவது  நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

building collapse

கர்நாடக மாநிலம் தார்வார் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட வணிக வளாக கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த வணிக வளாகத்தில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் கடைகள் செயல்பட்டு வந்தன.

திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்ததால் கட்டுமான தொழிலாளர்கள், கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இடிபாடுகளை உடைத்து தீயணைப்பு படையினர் இளைஞர் ஒருவரை உயிருடன் மீட்டனர்.

building collapse

இதுவரை இடிபாடுகளுக்குள் சிக்கிய 64 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டிடம் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர், வினய் குல்கர்னியின் உறவினருக்கு சொந்தமானது. இதன் கட்டிட பொறியாளர், மகாராஷ்ட்ராவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.