இடம் மாறி துடிக்கும் இதயம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

இடம் மாறி துடிக்கும் இதயம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

சராசரியான மனிதர்களைப் போல தான் அவரும் வாழ்ந்து வந்தார். பள்ளியில் படிக்கும் காலமாகட்டும், நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் பருவமாகட்டும்… வாழ்க்கையின் போக்கில் கல்யாணமும் செய்து கொண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகவும் ஆனார் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளைஞர். திடீரென்று சாதாரண வயிற்று வலியால் வந்தது அந்த அதிர்ச்சியான செய்தி.  தாள முடியாத வயிற்றுவலி பிரச்சனைக்காக அந்த இளைஞர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

இளைஞரை பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சியில் இருந்து மீளவே அரை மணி நேரமானதாம். இவரை கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி பொருளாகவே நினைத்து எல்லா டெஸ்ட்களையும் எடுத்திருக்கிறார்கள். அப்படி என்ன அதிர்ச்சி!

heart

சாதாரணமாக எல்லோருக்கும் இதயம் இடது பக்கத்தில் இருக்கும். ஆனால் அந்த இளைஞருக்கு உடல் உறுப்புகள் எல்லாமே உடம்புக்குள் தலைகீழாகப் பொருத்தப்பட்டு கனகச்சிதமாக வேலையும் செய்து கொண்டிருக்கிறது. அவரது இதயம் அவரது வலது பக்கத்திலும், கல்லீரல், பித்தப்பை எல்லாம் இதயம் இருக்க வேண்டிய இடது பக்கத்திலும் அமையப் பெற்றுள்ளது. இதுவரை எந்த சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய உடலில் இப்படி ஒரு அதிசயம் அமையப்பெற்று இருப்பதே தனக்கு இது நாள் வரையில் தெரியாது என்கிறார்.  இவரது எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளைப் பார்த்து, வயிற்று வலிக்கான காரணம், பித்தப்பையில் கற்கள் இருப்பது தான் என்பதை கண்டறிந்திருக்கும் மருத்துவர்கள், இவரது உறுப்புகள் எல்லாம் தலைகீழாக இடம் மாறி இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து, கற்களை அகற்றுவது மிகவும் கடினம் என்று விழி பிதுக்குகிறார்கள்.