இடமாற்றம் செய்யப்படாத அதிகாரிகள்; தேர்தல் ஆணையம் அதிமுக கையில்?!..

 

இடமாற்றம் செய்யப்படாத அதிகாரிகள்; தேர்தல் ஆணையம் அதிமுக கையில்?!..

தமிழக தேர்தல் வரலாற்றில் ஆளும் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இப்படி தேர்தல் நடத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி ஆதரவாக செயல்படுவது அம்பலமாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதனோடு சேர்த்து இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் முனைப்புடன் செயல்படுவது போல் காட்டிக்கொள்ளும் தேர்தல் ஆணையம், ஒருதலை பட்சமாக இயங்கி வருகிறது என பொது வெளியில் விமர்சிக்கப்படுகிறது.

jjhj

ஆளுங்கட்சி பணம் கொடுப்பதாக வெளியான வீடியோக்கள் பற்றி எந்த விசாரணையும் இல்லை. பிற கட்சிகள் பற்றி குற்றச்சாட்டுகளை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் ஆணையம் எதற்கும் செவி சாய்ப்பதாயில்லை. தேர்தலை நடத்ததான் தேர்தல் ஆணையம், ஒழுங்கு நடவடிக்கைகள் சரியாக இருக்கிறது என்று கூறிவிட்டு வேலூரில் தேர்தலை ரத்து செய்திருக்கிறது.

gfs

பொதுவாக ஒரு தேர்தல் நடக்கும் போது மாநிலம் முழுக்க இருக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். முக்கியமான ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள். காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். சந்தேகம் உள்ள அதிகாரிகள் தேர்தல் அல்லாத பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

ஆனால் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததில் இருந்து இன்று வரை அப்படி எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இதுவரை மாவட்ட ஆட்சியர்கள் யாரும் தேர்தலுக்காக மாற்றப்படவில்லை. தேர்தலின் போது அதிக கவனத்திற்கு உள்ளாகும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

zfzb

அதேபோல் மாவட்ட காவல் ஆணையர்கள், எஸ்.பிக்கள் தேர்தலின் போது மாற்றப்படுவதே எப்போதும் நடக்கும் . ஆனால் அப்படி இந்த தேர்தலில் தமிழகத்தில் எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களில் எல்லாம் பல ஆயிரக்கணக்கான அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் யாரும் மாற்றப்படவில்லை.

தமிழக அரசு நியமனம் செய்த அதிகாரிகள்தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார்கள். முதல்முறையாக ஒரு அரசு நியமித்த அதிகாரிகளை வைத்து தேர்தல் நடக்கிறது என்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை தமிழக தேர்தல் வரலாற்றில் ஆளும் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இப்படி தேர்தல் நடத்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.