இடது கைப்பழக்கம் கொண்டவர்களிடம் இருக்கும் சுவாரசியம்!

 

இடது கைப்பழக்கம் கொண்டவர்களிடம் இருக்கும் சுவாரசியம்!

கங்குலி, சுரேஷ் ரெய்னா போன்ற கிரிக்கெட் வீரர்கள் இடது கையால் பேட்டிங் செய்து, வலதுகையால் பந்துவீசுவதை பார்த்திருப்பீர்கள்தானே? மேலும், நுண்ணிய வேலைப்பாடுகளை செய்வதில் இடது கை பழக்கம் உடையவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

மனித மூளை அமைப்பில், பெருமூளையில் இருக்கும் வலதுபக்க‌ மூளை, உடலின் இடப்புறத்தையும், இடது பக்க மூளை, உடலின் வலதுபக்கத்தையும் இயக்கும், கட்டுப்படுத்தும். வலப்பக்க மூளை அதிகமாக செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது. இடது கை பழக்கம் குறைபாடோ, நோயோ அல்ல என்ற‌ விழிப்புணர்வை ஏற்படுத்த ஆகஸ்ட் 13ம் தேதி ‘உலக இடது கை பழக்க தினமாக’ கொண்டாடப்படுகிறது. இடது கை பழக்கம் உடையவர்களுக்கென சில பொருட்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, கத்திரிகோல்.

Left handed

வலது கை பழக்கம் உடையவர்களால் எந்த வேலையையும் இடது கையை பயன்படுத்தி சுலபமாக செய்துவிட முடியாது. ஆனால், இடது கை பழக்கம் உடையவர்கள், வலது கையை பயன்படுத்தியும் எந்த வேலையையும் செய்வார்கள். அத்துடன், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் பன்முகத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். கங்குலி, சுரேஷ் ரெய்னா போன்ற கிரிக்கெட் வீரர்கள் இடது கையால் பேட்டிங் செய்து, வலதுகையால் பந்துவீசுவதை பார்த்திருப்பீர்கள்தானே? மேலும், நுண்ணிய வேலைப்பாடுகளை செய்வதில் இடது கை பழக்கம் உடையவர்கள் சிறந்து விளங்குவார்கள். கவனித்துப் பார்த்தால், இடது கை பழக்கம் கொண்ட பெரும்பாலானோருக்கு கையெழுத்து மிக அழகாக இருப்பது தெரியவரும்.