இஞ்சிக்கு ‘மிஞ்சி’ எதுவும் இல்லை..!  இவ்வளவு நன்மைகளா?.. வியக்க வைக்கும் மருத்துவ குணம்!  

 

இஞ்சிக்கு ‘மிஞ்சி’ எதுவும் இல்லை..!  இவ்வளவு நன்மைகளா?.. வியக்க வைக்கும் மருத்துவ குணம்!  

இஞ்சி என்றாலே முகம் சுளிப்பவரா நீங்கள்? அதன் காரத்தன்மையால் அதன் மீது பலருக்கும் வெறுப்பு இருக்கக்கூடும்.முகம் சுழிக்காமல் இந்த செய்தியை முழுமையாக படியுங்கள்… வாழ்க்கையில் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம் என்று உணருவீங்க.
நம் வீட்டு கிச்சனில்  எப்போதும் இருக்க கூடிய இஞ்சி அநேக மருத்துவ குணங்களை கொண்டது, மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் கூட தராத நிவாரணத்தை இஞ்சி தரக்கூடும்! இஞ்சிக்கு  அனைத்து விதமான நோய்களையும் அழிக்கும் சக்தி கொண்டுள்ளது.

இஞ்சி என்றாலே முகம் சுளிப்பவரா நீங்கள்? அதன் காரத்தன்மையால் அதன் மீது பலருக்கும் வெறுப்பு இருக்கக்கூடும்.முகம் சுழிக்காமல் இந்த செய்தியை முழுமையாக படியுங்கள்… வாழ்க்கையில் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம் என்று உணருவீங்க.
நம் வீட்டு கிச்சனில்  எப்போதும் இருக்க கூடிய இஞ்சி அநேக மருத்துவ குணங்களை கொண்டது, மருத்துவர்களும் மருந்து மாத்திரைகளும் கூட தராத நிவாரணத்தை இஞ்சி தரக்கூடும்! இஞ்சிக்கு  அனைத்து விதமான நோய்களையும் அழிக்கும் சக்தி கொண்டுள்ளது.தவிர, இஞ்சியில் மிகக்குறைவான கலோரிகளே உள்ளதால் இது உடலுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது. ஒரு சிறு துண்டு இஞ்சியில் வைட்டமின்கள், மினெரல்ஸ், ஐயன், வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க் ஆகியவை உள்ளன. 

ginger

இஞ்சி ஒரு வேர் குடும்பத்தை சார்ந்தது. இது பார்ப்பதற்கு சற்று பயம் தரும் தோற்றத்தில் இருந்தாலும் இதில் உள்ள நன்மைகள் ஏராளம். இதனை ஃப்ரெஸ்ஸாகவும் காயவைத்தும், பொடியாக்கியும், எண்ணையாக்கியும் உபயோகப்படுத்தலாம்.
இஞ்சியின் 7அறிய குண நலன்களை பார்க்கலாம்!

vomiting

நலன் 1:
உங்களுக்கு ட்ராவல் செய்யும்போது  வாந்தி வரும் பிரச்சனை உள்ளதா?அப்போ இஞ்சி ஒரு இன்ஸ்டன்ட் நிவாரணி! மேலும் இது கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி உபாதைகளை தடுக்கவும், அஜீரண கோளாறுகளைச்  சரி செய்வதிலும்  இஞ்சிற்கு மிஞ்சி எதுவும்  இல்லை! மேலும் இஞ்சியில் பயோ ஆக்ட்டிவ் காம்போண்டுகள் அதிகம் உள்ளதால் நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, மருந்துகளை உட்கொள்ளுபவராக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது. 

constipation

நலன் 2:
வாயு தொல்லை, உப்பிய வயிறு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நிவாரம் பெற சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள் மாறாக ஒரு கப் தண்ணீரில் இஞ்சியை போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை குடிப்பதனால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும், இஞ்சி டீ-யும் ஒரு சிறந்த நிவாரணி!இனிமே சோடா, குளிர்பானங்களை தவிர்த்து இஞ்சி சேர்த்த பானங்களை பருகுங்கள்.

cough

நலன் 3:
இஞ்சி இன்ஃபெக்சன்  ஆகாமல் தடுக்கும் குணம் கொண்டது. உங்களுக்கு சளி பிடிப்பது போல் உணர்ந்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்… இஞ்சி ஜூஸ் ஒரு சிறந்த மருந்து இது சளியை உருவாக்கும் வைரஸ்களை எதிர்த்து செயல்பட்டு சளியை குணமாக்கும்.ஒரு ஆய்வில் ஃபிரெஷ்  இஞ்சியில் சுவாசக்கோளாறுகளை குணமாகும் சக்தி உள்ளது என தெரியவந்திருக்கிறது. காய்ந்த இஞ்சியை விட பிரெஷ் இஞ்சியில் அதிக குணநலன்கள் உள்ளன. இனிமே இஞ்சி வாங்கும் பொது இஞ்சி ஃபிரெஷா இருக்கானு பார்த்து வாங்குங்க.

peroids

நலன் 4:
மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் துடிக்கிறீர்களா? மாத்திரைகளை இனி பயன்படுத்த வேண்டாம்! இஞ்சி ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் ஆரம்பிக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு  4 முறை இஞ்சி தூள் மாத்திரைகளை 3 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இனி மாதவிடாய் காலத்தில் வலி வராது. மேலும், இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரை தேன் அல்லது எலுமிச்சையுடன் குடிக்கலாம்.

pain

நலன் 5:
இஞ்சியில் ஜின்ஜரோல் எனப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இது வீக்கத்தை குறைக்கும் நலன் கொண்டுள்ளது. மேலும், தசை பிடிப்பு போன்றவற்றிக்கு இஞ்சி மிகவும் நல்லது இது நல்ல தீர்வினை தரும்.இஞ்சி சாறினை வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும் அதுமட்டுமல்லாது நீங்கள் புதிதாக உடற்பயிற்சி அல்லது ஜிம் சென்று வந்தால் உங்கள் தசைகளில் வீக்கமோ அல்லது பயங்கர வலி இருக்கும் அனால் இது ஒரு நல்ல அறிகுறிதான் இந்த வலி உங்கள் தசைகள் வளர்கின்றன என்பதனை தெளிவுபடுத்தும்,ஆனால் இதை அவ்வளவு ஈஸியா விட்டுவிடுதல் கூடாது. இஞ்சினை சாறு  பிழிந்து அதனை ஒரு காட்டன் பையில் போட்டு குளிக்கும்போது ஓடும் தண்ணீரின் கீழ் வைத்தால் உங்கள்  மீது தண்ணீருடன் இஞ்சிச்சாறு விழும்போது உங்கள் தசை வலி எல்லாம் பறந்து விடும்.

cancer

நலன் 6:
இஞ்சி புற்று நோயை அழிக்கும் திறன் கொண்டது. ‘கோலோரெக்டல் புற்றுநோய்’ பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் இப்போதே  இஞ்சினை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

weight loss

நலன் 7:
உடல் பருமனாக இருக்கிறதென்று கவலை படுகிறீர்களா? இஞ்சி இருக்க இனி நீங்கள் ஜிம் போக வேண்டியதில்லை ! இஞ்சியை தினமும் சாப்பிட உங்களுக்கு ஏற்படும் அதிக பசி குறையும். உடல் எடையை நீங்கள் இஞ்சினை வைத்து சரிசெய்து கொள்ளலாம். 
மேற்கூறிய அனைத்து நலன்களுமே இஞ்சியின் இயற்கை நலன்கள் இதனை பயன்படுத்தி மருத்துவருக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்துங்கள்!