இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார் நடிகர் விஜய்! ரசிகர்கள் ஆரவாரம்

 

இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார் நடிகர் விஜய்! ரசிகர்கள் ஆரவாரம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவில் நடிகர் விஜய், அரசியல் மற்றும் அவரது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை  குறித்து பேசுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

vijay

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அரங்கிற்கு நடிகர் விஜய் வருகை தந்துள்ளார். நடிகர் விஜய் வரும்போது வாத்தி கம்மிங் என்ற பாடலின் பின்னணி இசை ஒலிபரப்பப்பட்டதால் ரசிகர்கள் ஆரவாரத்தில் மூழ்கினர்.