இசை ஞானியின் முக்கிய அறிவிப்பால் மகிழ்ந்த கலைஞர்கள்!?

 

இசை ஞானியின் முக்கிய அறிவிப்பால் மகிழ்ந்த கலைஞர்கள்!?

இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குக் கட்டடம் கட்டும் பொறுப்பைத் தான் ஏற்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். 

சென்னை: இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குக் கட்டடம் கட்டும் பொறுப்பைத் தான் ஏற்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று தனது 76ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அதனால் அவரது ரசிகர்கள் பலர்  அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்தார்கள். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றும் தனது பிறந்தநாளான இன்று மாலை முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிடுகிறேன் என்றும் தெரிவித்தார்.

ilaiayaraja

இதையடுத்து இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி   நேற்று மாலை சென்னையில் இசை கொண்டாடும் இசை என்ற பெயரில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் கமல்ஹாசன், பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கே.ஜே.ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ilaiyaraja

அப்போது ரசிகர்கள் மத்தியில் பல பாடல்களைப் பாடியதோடு, அந்த பாடல்கள் உருவாகும் போது  நடைபெற்ற சுவாரஸ்ய  தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குக் கட்டடம் கட்டும் பொறுப்பைத் தாம் ஏற்பதாகவும், அதற்கு நிதி திரட்ட பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்’ என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் இசைக் கலைஞர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். 

ilaiayaraja

முன்னதாக இளையராஜாவின் பிறந்தநாளைச் சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் மாணவ மாணவியர் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.