இசை கலைஞர் மரணத்தில் தொடரும் மர்மங்கள்..! திரைப்படங்களை மிஞ்சும் திருப்பங்கள் !?..

 

இசை கலைஞர் மரணத்தில் தொடரும் மர்மங்கள்..! திரைப்படங்களை மிஞ்சும் திருப்பங்கள் !?..

விபத்தில் குழந்தை அதே இடத்தில் இறந்து விட மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

கேரளத்தைச் சேர்ந்த பிரபல வயலினிஸ்ட் பால பாஸ்கர் திருவனந்தபுரத்தை அடுத்த பள்ளிபுரம் என்ற இடத்தில் கார்விபத்தில் மரணமடைந்தது கடந்த 2018 செப்டம்பர் 25 ம் தேதி.காரில் பாலபாஸ்கர்,அவரது மனைவி விஜயலட்சுமி இரண்டு வயது மகள் தேஜஸ்வி பாலா ,அர்ஜூன்,என்று இரு நண்பர்களும் இருந்திருக்கின்றனர்.

விபத்தில் குழந்தை அதே இடத்தில் இறந்து விட மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பாலபாஸ்கர் சிகிச்சை பலனளிக்காமல் அக்டோபர் 2 ம் தேதி இறந்து போனார்.அர்ஜூனும்,பாலபாஸ்கர் மனைவியும் சிகிச்சை பெற்று வந்தனர்

balabhaskar

சாலகுடியிலிருந்து கொல்லம் 200 கி.மீ .இந்தத்தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடந்திருக்கிறது கார்.வழியில் இருக்கும் சி.சி.டி.வி கேமராவில் காரை அர்ஜூன் ஓட்டியது பதிவாகி இருக்கிறது.விபத்து நடந்தபோது காரை ஓட்டியது பாலபாஸ்கரா அர்ஜூனா,இது விபத்தா கொலையா என்று போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் புதுப்புது அதிர்ச்சி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 

பாலபாஸ்கரின்  நெருங்கிய நண்பரும் இப்போது தங்கம் கடத்திய வழக்கில் சிறையில் இருப்பவருமான பிரகாசன் தம்பி மூலம் வந்தது.விபத்து நடந்த தினத்தில் கொல்லத்தில் ஒரு சாலையோர கடையில் பால பாஸ்கர் குடும்பத்துடன் தம்பி பேசிக்கொண்டு இருக்கும் சி.சி டிவி காட்சிகள் கிடைத்திருக்கின்றன.

bala

தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு உடையவர் என்று சந்தேகிக்கப்படுபவர் பாலக்காடு செர்புலசேரியைச் சேர்ந்த ரவீந்திரன்.இவர் ஒரு ஆயுர் வேத மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மகன் ஜிஸ்னுவுக்கும் பாலபாஸ்கருக்கும்  நீண்டகால நட்பு இருந்ததாகவும் சமீபகாலமாக சில தகராறுகள் ஏற்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த ரவீந்தரனின் நெருங்கிய உறவினர்தான் விபத்தில் உடனிருந்த அர்ஜூன். விபத்து நடந்தபோது காரை ஓட்டியது பாலபாஸ்கர்தான் என்று இவர் சொல்லிவந்தார்.இந்த நிலையில்,பிரபல இசைக்  கலைஞரான கலாபவன் ஷோபி என்பவர் விபத்து நடந்த சமையத்தில் தான் அந்த வழியே வந்ததாகவும் அங்கே நின்றவர்கள் தன்னை அருகில் காரை நிறுத்த அனுமதிக்கவில்லை என்றும்,விபத்து நடந்தபிறகு அங்கே தயாராக காத்திருந்த யாரோ பாலபாஸ்கரை.தூக்கி டிரைவர் சீட்டில் உட்கார வைத்து விட்டு போலீசை அழைத்திருக்கலாம் என்று குற்றம் சாட்டுகிறார்.

bala

இப்போது  லேட்டஸ்ட் திருப்பமாக அர்ஜூனைக்  கானவில்லை என்கிறது போலீஸ்.இன்னும் காயங்கள் ஆறாத நிலையில் அர்ஜூன் எங்கே போயிருப்பார் என்று தேடிய போலீசார் ரவீந்தரனை விசாரித்தனர்.தங்களது மகன் ஜிஸ்னுவுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு டூர் போயிருப்பதாக ரவீந்திரன் கூறி இருக்கிறார்.அதை நம்பமுடியாமல் போலீசார் அர்ஜூன்,ஜிஸ்னு இருவரின் செல்போன் எண்களை கண்காணித்து வருகிறார்கள். 

இதுவரை அவர்களை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை பொதுவாகவே  மலையாளிகள் கிரைம் கதைகளில் ஆர்வமுள்ளவர்கள். இப்போது நிஜத்திலேயே ஒரு கிரைம் த்ரில்லர்  நடந்துகொண்டு இருப்பதால் ஒட்டு மொத்த கேரளாவே இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறது.