“இசையுலகில் புது புரட்சி” அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

“இசையுலகில் புது புரட்சி” அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

இந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து, திராவிட இயக்கத்தின் எழுச்சி வரை பல மிக முக்கியமான சமூக மாற்றங்களுக்கு துணையாக இருந்தவை கலையும், இலக்கியமும் தான். மக்களை ஒருங்கிணைக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய சாத்தியமான வழிமுறையாக கலை இருந்திருக்கிறது, இருக்கிறது. அமெரிக்காவில்  கருப்பினத்தினவர்களின் விடுதலைக்கு இசை மகத்தான ஆயுதமாக விளங்கியதை நாம் அறிந்ததே.

இத்தகைய உலக விடுதலை வரலாற்றின் தொடர்ச்சியிலிருந்தே, இயக்குநர் பா.இரஞ்சித் தனது கலைப் படைப்புகளின் மூலம் சமூகத்திற்கு பங்காற்றி வருகிறார். அவரின் கனவிலிருந்து உருவான “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் குரல்கள் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரல்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

pa ranjith music band

இசையுலகில் ஊடுருவியிருக்கிற ஏற்றத் தாழ்வுகளை உடைத்தெறிந்து கானாவை வெகுமக்கள் இசையாக எடுத்துச் சென்றது மட்டுமின்றி, அதன் வழியே ஒடுக்கப்படும் யாவருக்குமான அரசியலைப் பேசியதும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவின் வெற்றி.

அதற்கான அங்கீகாரமாகவே Behind woods மற்றும் நியூஸ் 7 தமிழ் ஆகியவை சிறந்த இசைக்குழுவிற்கான விருதினை “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவிற்கு வழங்கி பெருமை செய்திருக்கின்றன.
தமிழக முதல்வர் பழனிச்சாமி “இசைரத்னா ” விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதோடு பல்வேறு விருதுகளையும் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவினர் பெற்றுவருகிறார்கள்.