இசையின் சக்தி! கான்செர் நோயாளியை பாட்டுப்பாடி மகிழ்ச்சியூட்டிய நர்ஸ்! 

 

இசையின் சக்தி! கான்செர் நோயாளியை பாட்டுப்பாடி மகிழ்ச்சியூட்டிய நர்ஸ்! 

நர்ஸ் என்றாலே முகத்தை ‘சிடுசிடு’ப்பாக வைத்துக் கொண்டு கத்திகொண்டே இருப்பவர்களும் உண்டு,அன்னை தெரசா மாதிரி கருணை மழை பொலிப்பவர்களும் உண்டு.சமீபகாலமாக நோயாளிகளை உற்சாப்படுத்த பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி அதகளம் பண்ணும் நார்களைப் பற்றியும் செய்திகளில் பார்க்கிறோம், அப்படியொரு நர்ஸ் ஒரு கிட்டார் இசை கலைஞரை பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தும் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது! அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.

nurse

நாஷ்வில்லில் உள்ள சாரா கண்ணோன் கேன்ஸர் சென்டரில் அனுமதிக்கப்பட்ட கிட்டார் பிளேயரான ‘பென் பென்னிங்டன்’என்ற நபருக்கு கீமோதெரபி சிகிச்சையின் போது  அவருடன் இருந்த நர்ஸ் அவர் ஒரு கிடார் பிளேயர் என்பதை அறிந்து அவருக்கு கிட்டாரினை தந்து வாசிக்க சொல்லி தானும் அவருடன் சேர்ந்து “ஓ ஹோலி நைட்” எனும் கிறிஸ்துமஸ் பாடலை பாடியிருக்கிறார்.

இதனை பார்த்த பென்னின் மகள் பிராண்டி மைக்கில் லீத் அந்த அழகிய தருணத்தை வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் அவர் எழுதி இருந்ததாவது,”என்னுடைய தந்தையின் நர்ஸ், அவர் ஒரு கிட்டார் பிளேயர் என்பதை அறிந்து அவரிடம் கிட்டாரினை எடுத்து வந்து கீமோதெரபி சிகச்சையின் போது வாசிக்க தந்தார், நர்ஸும் தந்தையுடன் சேர்ந்து ஓ ஹோலி நைட் என்ற பாடலை பாடினர், யாருக்கு தெரியும் நர்ஸும் பாடுவாரென்று!! இதனை ஷேர் செய்யுங்கள் நர்ஸ் அலெக்ஸா இந்த வருடத்தின் சிறந்த நர்ஸ் என்பதை அனைவரும் அறியட்டும்!!அவர் மிகவும் ஆச்சர்யமானவர்! #alexatsarahcannon” என்று ஹேஸ் டேக் தட்டிவிட்டிருக்கிறார்.

அவரின் போஸ்டில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுருந்தது, பென் பென்னிங்டன் 1980-லிருந்து  நாஷ்வில்லின் ஒரிஜினல் கிட்டார் பிளேயர் மேலும் அவர் இதுவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக டௌனில் உள்ள அனைத்து பழைய பார்களிலும் வாசித்துள்ளார், கிராண்ட் ஓலே ஓப்ரியில் 23 வருடங்கள் ஜாக் க்ரீனுடன் வாசித்துள்ளார். தற்போது அவர் சாரா கண்ணொன் கான்செர் சென்டரில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் கிராண்ட் ஓலே ஓப்ரியின் மின்னி பேர்ல் என்று அழைக்கப்படும் சாரா கண்ணொன் ஒரு அமெரிக்க நாட்டு நகைச்சுவையாளர் ஆவர், அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1969 முதல் 1991 வரை ஹீ ஹா ஹாவ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார்” இவ்வாறு அவர் அந்த மருத்துவமனையின் பெருமை பற்றியும் கூறியிருந்தார்.

பொதுவாக இசை, இது போன்ற பாதிப்பில் உள்ளவர்களின் மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்… குறிப்பாக கேன்ஸர் நோய் பாதிப்பில் இசையைக் கேட்கும் போது மன தைரியத்தையும் விரைவில் நலமுடன் திரும்புவதற்கு உதவியாக இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்லும் நிலையில் இந்த நர்ஸுக்கு பாராட்டுக்கள் குவிகிறது… ‘வாழ்த்துக்கள்க்கா’.