இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு குவியும் பாராட்டுக்கள்! எதுக்கு தெரியுமா?

 

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு குவியும் பாராட்டுக்கள்! எதுக்கு தெரியுமா?

இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டும் விதத்தில் ஹைதராபாத்தில் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை: இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டும் விதத்தில் ஹைதராபாத்தில் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. 

2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அதைத்தொடர்ந்து விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது மெலடி பாடலின் மூலம் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ராட்சசன் படத்தையடுத்து தற்போது இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, கடாரம் கொண்டான், மஹா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரின் இசையை தாய்நாட்டில் மட்டுமல்ல, அவை நாடு மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. 

ghibran

இந்நிலையில் இவரின் புகழை கவுரவிக்கும் வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, ‘ASIAN ARAB AWARD 2019’ என்ற விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பற்றி அவர் கூறுகையில் ‘எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே. எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். 

asian arab awards 2019

பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த பிரபலமான பிரதிநிதிகளால் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இது வெறும் மகிழ்ச்சியை மட்டும் அளிக்காமல், எதிர்காலத்தில் மிகச் சிறந்த இசையை வழங்கும் பொறுப்பை எனக்கு அதிகமாக்கியிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாவீரர் பிரபாகரனுக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரன்: வைகோ