இசையமைப்பாளர் சத்யாவுடன் ஷேர்சாட் இணைந்து வழங்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்!

 

இசையமைப்பாளர் சத்யாவுடன் ஷேர்சாட் இணைந்து வழங்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்!

சீனாக்காரர்களை திட்டும் வரை  பல பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இவையனைத்தும் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. 

கொரோனா நோய் தொற்று உருவானாதிலிருந்து  அதற்கான  விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்கள் முதல் சீனாக்காரர்களை திட்டும் வரை  பல பாடல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  இவையனைத்தும் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. 

tn

அந்த வகையில் ஷேர்சாட்  நிறுவனம் எங்கேயும் எப்போதும்,  காஞ்சனா 2, இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா உடன் இணைந்து கொரோனா  விழிப்புணர்வு பாடல் ஒன்றை வழங்கியுள்ளது. 

ttn

“தனித்திரு…விழித்திரு” என்பதை அடிப்படையாக கொண்டு 1 நிமிடம் 40 வினாடிகள் உருவாகியுள்ள இப்பாடலில் அலட்சியம் வேண்டாம் என்றும் இதுபோன்ற இக்கட்டான சூழல் வெகுவிரைவில் கடந்து போகும்.

tn

அதனால் உறுதியாக இருந்து உயிர்களை  காப்போம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும், அதே சமயம் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இப்பாடலை அமைத்துள்ளது.  

ttn

கொரோனா விழிப்புணர்வு பாடல்களுக்கு நாளுக்கு நாள் இணையத்தில் மவுசு கூடிவரும் நிலையில் “தனித்திரு…விழித்திரு” பாடலும் இணையத்தில் வேகமாக பரவி  பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.