இசிஆரில் விதிமீறிய கட்டடங்கள் தொடர்பான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு

 

இசிஆரில் விதிமீறிய கட்டடங்கள் தொடர்பான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு

கடந்த ஆண்டு கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி சென்னை இசிஆரில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்துத் தள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 

கடந்த ஆண்டு கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி சென்னை இசிஆரில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்துத் தள்ள வேண்டும் என்றும் விதி மீறல் கட்டடங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கட்டிடங்கள் உரிமையாளர் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் சென்னை மாநகராட்சி , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.வு)க்கு உத்தரவிட்டது. 

courrt

இது குறித்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், சென்னை இ.சி.ஆரில் விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படாததால் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு(சி.எம்.டி.ஏ.வு) தலா ரூ. 25,000 அபராதம் விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து, முட்டு காட்டில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள தனியார் பங்களாவின் மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், வீட்டு வசதி வாரிய செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.