இங்க அடிச்சா இங்கதான்யா வலிக்கும், அங்க எப்புடி வலிக்கும்? ஏம்ப்பா பாபா, கொஞ்சம் பேசாம போப்பா

 

இங்க அடிச்சா இங்கதான்யா வலிக்கும், அங்க எப்புடி வலிக்கும்? ஏம்ப்பா பாபா, கொஞ்சம் பேசாம போப்பா

“எல்லாரும் என்னை மாதிரியே திருமணம் செய்துகொள்ளாமல் பாபாவாகி, உங்களுக்கு பாப்பா இல்லாமல் போய்விட்டால், மக்கள் தொகை விரைவிலேயே கட்டுக்குள் வரும்”னு சொல்லி இருந்தார்னா, அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

பேக்கரியை டெவலப் பண்ணினதும் போதும், பண்ணு வேணும் ரொட்டி வேணும்னு இம்சை அதிகரிக்கிற மாதிரி, பாஜக ஆட்சிக்கு வந்ததும், மறுபடியும் இந்த பாபா ராம்தேவ் அரசுக்கு ஆலோசனைங்கிற பேர்ல அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார். இன்றைக்கு அவர் உதித்திருக்கும் முத்து, “மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க மூன்றாவது குழந்தை பெற்றால், அந்த குழந்தைக்கு வாக்குரிமையை ரத்து செய்யவேண்டும்” என்பதாம்.

Baba Ramdev

நாள்பட்ட மூட்டுவலி இருக்கிறது என்றால், சிகிச்சைக்கு பாபா ராம்தேவிடம் இரண்டு வழிகள் உள்ளன. முதல்வழி தன் சிஷ்யகோடிகளுக்கு பாபா சொல்லித்தருவது.இரண்டாவது வழி, அவரே பின்பற்றுவது மற்றும் அதிக பலன் தரக்கூடியது.  பாபா சொல்லித்தரும் யோகாசனத்தை நாள்தோறும் செய்வது முதல் வழி. இப்படி செய்வதால், மூட்டுவலி குறைந்துவிடுமா? இதற்கான பதிலை பெறுவதற்குள், பாபாவின் இரண்டாவது வழியையும் கேட்டுவிடுங்கள்.  லண்டனுக்கு விமானமேறி மூட்டுமாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வது இரண்டாவது. என்னாங்கடா, பித்தலாட்டமா இருக்கு? அடுத்தவனுக்கு வந்தா யோகா அவருக்கு வந்தா அறுவைசிகிச்சையா என்றெல்லாம் கேட்கப்படாது.

Baba Ramdev

இந்தமாதிரி தனக்கு ஒன்று என்றால், அலோபதிக்கு ஓடுவதும், பிறர்க்கு என்றால் யோகாவில் எல்லாவற்றையும் குணப்படுத்தமுடியும் என்றும் கப்சா விட்டுத்திரியும் ராம்தேவ், இப்போது மக்கள் தொகை பிரச்னைக்குத்தான் மேற்படி யோசனைய சொல்லிருக்கிறார். வாக்குரிமை இருப்பதாலோ அல்லது அதனை இழப்பதாலோ சராசரி குடிமகனுக்கு என்ன கவலை? குழந்தைக்கு மறுக்கப்பட இருக்கும் வாக்குரிமைக்காக, எந்த பெற்றோராவது குழந்தைப் பெற்றுக்கொள்வதை விட்டுவிடப்போகிறார்களா என்ன? இதற்குப்பதில், “எல்லாரும் என்னை மாதிரியே திருமணம் செய்துகொள்ளாமல் பாபாவாகி, உங்களுக்கு பாப்பா இல்லாமல் போய்விட்டால், மக்கள் தொகை விரைவிலேயே கட்டுக்குள் வரும்”னு சொல்லி இருந்தார்னா, அதுல ஒரு அர்த்தம் இருக்கும். நாட்ல இந்த பாபாக்கள் தொல்லை தாங்க முடியலப்பா!