இங்கு நடக்கும் பூஜையை காண்பவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சமே இருக்காது… பாடல்பெற்ற தலங்கள் வரிசை :- 14 சீர்காழி

 

இங்கு நடக்கும் பூஜையை காண்பவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சமே இருக்காது… பாடல்பெற்ற தலங்கள் வரிசை :- 14 சீர்காழி

மயிலாடுதுறையில் இருந்து வடகிழக்கே 21 கி.மீ.பிரம்மபுரம், வேணுபுரம், புகலி,வெங்குரு,தோணிபுரம்,பூந்தராய்,புறவம்,சண்பை,காளிபுரம்,கொச்சைவயம்,கழுமலம்,காழி என்று 12 பெயர்கள் கொண்ட இந்த பிரமாண்ட கோவில் உப்பனாற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது.

மயிலாடுதுறையில் இருந்து வடகிழக்கே 21 கி.மீ.பிரம்மபுரம், வேணுபுரம், புகலி,வெங்குரு,தோணிபுரம்,பூந்தராய்,புறவம்,சண்பை,காளிபுரம்,கொச்சைவயம்,கழுமலம்,காழி என்று 12 பெயர்கள் கொண்ட இந்த பிரமாண்ட கோவில் உப்பனாற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது.

temple

கோவிலின் பரப்பளவு 17 ஏக்கர் 35 செண்ட்.நான்கு புரமும் ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்கள்.மூலவர் சுயம்புலிங்க வடிவில் பிரம்மபுரீஸ்வரர். அம்மை திருநிலை நாயகி.இருவரும் தனித்தனி சன்னிதிகளில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றனர்.

தீர்த்தம் பிரம்மதீர்த்தம்.தலமரம் மூங்கில்.பிரளயகாலத்தில் இறைவன், 64 கலைகளையும் ஆடையாக உடுத்தி உமாதேவியுடன் தானே ஒரு தோனியில் புறப்பட்டு வர, அந்தத் தோனி இங்கே தரைதட்டியதாம்.அதனால் இதுதான் மூல தலம் என்று இறைவன் இங்கேயே தங்கிவிட்டாராம்.அதனால் இங்கே அவர் பெயர் தோனியப்பர்.

thirunar sambhathr

சைவ சமையத்திற்கு புதிய விளக்கம் கொடுக்க பிறந்த திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் இது.இக்கோவில் மூன்று பகுதிகளை கொண்டது.உயரமான ஒரு செயற்கை கட்டுமலையின் மீது அதன் உச்சியில் தோனியப்பர் கோவில் கொண்டிருக்கிறார்.உட்பிரகாரத்தில்,விநாயகர் முருகன், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள்,பைரவர்,சூரியன், காளிபுரீசுவரர்,லிங்கோத்பவர்,துர்கை மற்றும் நவக்கிரகங்கள் உள்ளன.

முருகப்பெருமான்,காளி,பிரம்மன் வழிபட்ட தலம்.சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களுமாக 71 பதிகங்கள் பெற்ற தலம்.அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான சீர்காழியில் உள்ள சட்டநாதர் சந்நிதி மிகவும் விசேடமானது.ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு நடக்கும் பூஜையின் போது சட்டநாதருக்கு புனுகு எண்ணெய் சார்த்தி,நெய்யில் சுட்ட வடை பாயசம் நிவேதனம் செய்கிறார்கள். 

poojai

இந்தப் பூஜையை காண்பவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை.இந்தத்தலம் மிகவும் தொன்மையானது.இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ” திருமுலைப்பால் உற்சவம்” சித்திரை திருவிழாவில் இரண்டாம்நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர் நட்பை பெற்று அவரால் “அப்பர்” என்று அழைக்கப்பட்ட தலம்.

சுந்தரர் இந்த தலத்தை மிதிப்பதற்கு அஞ்சி ஊருக்கு வெளியே நின்று தொழுதபோது அவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்.மாணிக்கவாசகர், பட்டினத்தடிகள்,கணநாதர்,நம்பியாண்டார் நம்பிகள்,சேக்கிழார்,அருணகிரி நாதர், அருணாசல கவிராயர் ஆகியோர் பாடியதலம்.ராஜராஜ வளநாட்டு திருக்கழுமல நாட்டு பிரம்மதேயம்.திருக்கழுமலம் என்றும்,இறைவன் திருக்கழுமலமுடையார்,திருத்தோனிபுரம் உடையார்  என்றும் அழைக்கப்படுகிறார்.42 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.