இங்கிலாந்தை வீழ்த்தியது இப்படித்தான், இலங்கை கேப்டன் ஓபன் டாக்!!

 

இங்கிலாந்தை வீழ்த்தியது இப்படித்தான், இலங்கை கேப்டன் ஓபன் டாக்!!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறாங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் மட்டிமே எடுத்தது.

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறாங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் மட்டிமே எடுத்தது. 233 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இலங்கை அணியின் அபார பந்து வீச்சால் தொடக்கத்திலேயே திணறிப்போனது. இதனால் இங்கிலாந்து அணி 47 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இலங்கை அணியின் சிறந்த பந்து வீச்சாளரான மலிங்கா 43 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனஞ்செய டிசில்லா 3 விக்கெட்டுகளும், உதனா 2 விக்கெட்டுகளும், பிரதீப் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்த வெற்று குறித்து இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கூறியதாவது, வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ரன் வரை விரும்பினோம். மேத்யூசின் பேட்டிங் அபாரமாக இருந்தது.

232 ரன் எடுத்தாலும் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. இதுவே இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்